சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையொப்பமிடும் போராட்டம் தொடர்ச்சியாக நல்லூர் ஆலய பின் வீதியில் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெற்று வருகின்றது.
இன்று நல்லூர் தேர் ஆகையால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கையெழுத்திட்டு வருகின்றனர்.
ஒரு இலட்சத்துக்கு அதிகமான கையொப்பங்களுடன் கையெழுத்துவேட்டை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. வயதானவர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை மற்றும் பலஅமைப்புக்கள் இணைந்து ´சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழ் செயற்பாட்டுக்குழு´ ஊடாக முன்னெடுக்கும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கையொப்பமிட்டு வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு ஏதிராக சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு ஜக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தியும், இலங்கை அரசினால் ஏற்படுத்தப்படும் எந்தவொரு உள்ளக பொறிமுறை விசாரணயை நிராகரித்தும் இந்த கையெழுத்து போராட்டம் வடக்கு, கிழக்கு எங்கும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment