தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் யேர்மனி Saarlouis நகரில் ஆரம்பிக்கப்பட்டு 60 KM தூரத்தை கடந்து Saarbrücken நகரை ஊடறுத்து பிரான்ஸ் எல்லையை நோக்கி பயணித்தது .
இன்றைய மனித நேய ஈருருளிப்பயணத்தில் Bruchsal செயற்பாட்டாளர்கள் இருவர் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர் . இன்று மாலை 14:30 மணிக்கு Saarbrücken நகர மத்தியில் தமிழின அழிப்பை பல்லின சமூகத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் பதாதைகள் தாங்கிய வண்ணம் துண்டுப்பிரசுரம் வழங்கி மக்களுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டது .
ஐநா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நாளைய தினம் மாலை 5 மணிக்கு Saargemünd நகரத்தில் வைத்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் கையளிக்கப்படும் .இப் பயணத்தை பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் . எதிர்வரும் 21.09.2015 அன்று ஜெனிவா நகரில் நடைபெறும் மாபெரும் பேரணியில் மனித நேய ஈருருளிப்பயணம் சென்றடையும் .
No comments:
Post a Comment