வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை மிகவும் பக்திப் பரவசமாகவும அதேவேளை மிகவும அமைதியாகவும் இடம்பெற்றது.
ஆலய தீர்த்தக் கேணியில் கடந்த காலத்தில் இளைஞர்களின் அட்டகாசத்தினால் இம்முறை தீர்த்தக்கேணியை சுற்றி அதிகளவான பாதுகாப்பு இருப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்ததுடன் தீர்த்தக்கேணியின் உள் புறத்தில் சிவில் உடையில் சுமார் இருநூறு பொலிசார் வரை கடமையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
இதற்கும் மேலாக ஏற்கனவே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியினால் ஆலய சுற்றாடலில் பொது மக்குளுக்கு இடையூறாகவும் அத்துடன வழிபாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்டம் உரிய கடமையை செய்யும் என அறிவித்தல் விடுத்திருந்தமையாலும் இம்முறை அடியவர்கள் மிகவும் அமைதியாக பல வருடகால இடைவெளியின் பின்னர். தீர்த்தத்தை கண்டு களித்துள்ளதுடன் பெண்களும் கூட எந்த வகையான சேட்டைகளுக்கும் உள்ளாகாது ஆலய சுற்றாடலில் இருந்துள்ளமையும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.
தூக்குக்காவடிகள், பறவைக் காவடிகள் இன்றும் ஆலயத்திற்கு குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் எடுத்து வரப்பட்டதுடன் அங்கப்பிரதட்சையும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment