தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில், மூன்றா வது வருடமாக ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச் சங்கத்தின் முதலாவது கலைவிழா நிகழ்வு
கடந்த 05.09.2015 சனிக்கிழமை மதியம் 1.00 மணியளவில், தாயக மண்மீட்புப்போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும், போரின்போது கொல்லப்பட்ட பொது மக்களுக்குமான அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது.இந்நிகழ்வில் மங்களவிளக்கினை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் சுகந்தி சுபாஷ்கரன் அவர்களுடன் தமிழ்ச்சங்க தலைவர் திரு. அன்ரனி குருஸ் அவர்களும், சங்கத்தின் உறுப்பினர் இருவரும் ஏற்றிவைத்தனர்.தொடர்ந்து இந்நிகழ்வின் நோக்கத்தையும், பங்களிப்பு பற்றியும் ஒளி விவரணம் மூலம் தெரியப்படுத்தி அனைவரையும் வரவேற்றுக்கொண்டனர். பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் வரவேற்பு நடனம் , ஸ்ராஸ்பூர்க் மாணவ மாணவியரின் மாவீரர் வணக்க நடனம், சிறப்பு நிகழ்வாக மூத்த பாடற்கலைஞர்களின் தாயகவிடுதலைப்பாடல் மிகவும் எழுச்சியூட்டும் வகையில் அமைந்திருந்தது.
சிறப்பு உரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் போராளி குடும்ப நலன் பேணல் தொடர்பாளர் திரு.ப.சுரேந்திரகுமார் வழங்கினார், தற்போதைய புலம்பெயந்து வாழும் மக்களின் நிலைப்பாடும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் செயற்பாடும் எப்படி அமைந்திருக்கிறது என்றும் நாம் என்ன செய்து கொண்ருக்கின்றோம், இனி நாம் என்ன செய்யவேண்டும், எப்படி செயற்பட வேண்டும் என்றும் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் வழங்கி நிகழ்வை முழுமைப்படுத்தினார்.
மற்றும் தாயகம் சார்ந்த சிறந்த எழுத்தாளர் திரு. கிருஷ்ணா நாகரத்தினம் அவர்கள் தலைமை ஏற்று நடத்திய சிறப்பு பட்டிமன்றம் “தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் சமுதாயத்திற்கு நன்மையே அளிக்கிறது, தீமையே அளிக்கிறது” பாரிஸ், மூல் கவுஸ், ஸ்ராஸ்பூர்க் கலைஞர்களும் இணைந்து தமது வாதங்களை அழகாகவும், நகைச்சுவையாகவும், அதேநேரம் ஆணித்தரமாகவும் தமது கருத்துக்களை முன்வைத்து சிறப்பாக வழங்கினர்.
தாயத்தின் தற்போதைய நிலையை உணர்த்தி, சிறப்பாக அமைந்த “இருந்தவர் இருந்தால்” சிறப்பு நாடகம், ஆசிரியர் திரு அருளப்பு மரியதாஸ் அவர்களால் எழுத்துருவாக்கப்பட்டு, இங்கு வாழும் இளைஞர்களையும், மாணவர்களையும் ஒன்றுதிரட்டி ஒருமைப்படுத்தி அவர்கள் மூலம், தமிழீழத்தை ஆண்ட “எல்லாள மன்னனின் வீரம் நிறைந்த வரலாற்று நாடகம்” மேடையேறியது. அதில் பாத்திரமேற்ற இளையவர்கள் அவற்றை சரிவர உணர்ந்து மனனம் செய்து ஒப்புவித்ததோடு மட்டுமல்லாது கூச்சம் சிறிதும் இன்றி உணர்வோடு உயிர்கொடுத்து நடித்துக் காட்டியிருந்தமை மிகவும் பாராட்டிற்கு உரியது. அந்த மாவீரனின் வீரத்தையும், தமிழர்களின் தலைவர் பிரபாகரனின் வீரத்தையும் எமது மண்ணில் தற்போது நடைபெற்று வருகின்ற திரைமறைவு நிகழ்வுகளையும், தங்கை வித்தியாவிற்கு நடந்த கொடுமையையும் மிகவும் தத்ரூபமாக உணர்வோடு வழங்கி அரங்கில் இருந்தவர்களின் கண்களில் நீர் கசிய சில மணித்துளிநேரம் அரங்கை கட்டிப்போட்டனர். முடிவில் எந்த அடக்கு முறைக்கும் நாம் அஞ்சுபவர்கள் அல்லர் என்ற செய்தியை மிகவும் உணர்வோடு உணர்த்தி மக்களின் பலத்த கரகோசத்துடன் நிறைவு செய்தனர்.
மூல்கவுஸ் கலைஞர்களின் “தமிழே அமுதே” நாட்டிய நாடகம் மிகவும் எழுச்சி நிகழ்வாகவும், அனைவரது வரவேற்பையும் பெற்று, சிறுவர்கள் சிறுமியரின் ஆர்வமும் உணர்வான நடிப்பும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொண்டது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆசிரியர் யசோதாவிடம் நடனம் பயிலும் வேற்று இன மாணவிகள் இருவர் எமது கரகாட்டத்தையும், பரதத்தையும் கற்று, எமது பாடல்களை புரிந்து கொண்டு அபிநயம் வழங்கியது மிகவும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. இன்னும் பல சிறப்பு மிக்க நடனங்களும் தாயகப்பாடல் தென்இந்திய திரைப்பட பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஒட்டுமொத்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் தாயகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைந்திருந்தன. கரோ இசை மூலம் தத்துவப்பாடல்கள் சிறியோர், இளையோர், பெரியோர் அனைவரும் அழகாக இனிய குரலில் பாடியிருந்தனர். இந்நிகழ்விற்கான ஒலி அமைப்பை ஜேர்மன் அமுதகானம் இசைகுழுவினர் தாயக உணர்வோடு தாயகப்பாடல்களுக்கான கரோ இசையும், எமது நடிகர்களுக்கான அனைத்து வசதிகளை யும் வழங்கி, ஒலி அமைப்பை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறு பிரான்ஸ், ஜேர்மன், மூல்கவுஸ் போன்ற இடங்களில் இருந்து மக்களும், கலைஞர்களும் கலந்துகொண்டு நிகழ்வுகளையும், ஒத்துழைப்பையும் இந்த நல்ல நோக்கத்திற்காக தந்திருந்தனர்.
ஒரு நிறைவான தாயக உணர்வான நம்பிக்கை ஒளியை ஐரோப்பிய நாடுகளில் ஒரு முக்கிய இடமாகக் கருதப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் காணக்கூடியதாக இருந்தது. இந்நிகழ்வுகள் யாவும் இரவு 7.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.

No comments:
Post a Comment