யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நிலைப்பாட்டையிலேயே 90 சதவீதமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை உள்நாட்டு வானொலி ஒன்றிடம் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழரசு கட்சி தவிர்ந்த மூன்று கட்சிகள் சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை கோரி, மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
வடமாகாண சபையும் சர்வதேச விசாரணை கோரி தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது.
தமிழரசு கட்சியின் பல உறுப்பினர்கள் யுத்தக்குற்றங்களுக்கு உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழரசு கட்சியின் முன்னிலையில் உள்ள சிலர் மாத்திரமே இந்த விடயத்தில் இன்னும் நிலையான தீர்மானம் ஒன்று இல்லாமல் இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment