September 16, 2015

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கருக்கி உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த
வணக்க நிகழ்வானது சுவிஸ் வோ மாநிலத்தில் லவுசான் நகரில் 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் கனத்த இதயங்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் வோ மாநில இளம்; இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள்; இசைக்கப்பட்டன.தீயினிற் கருவாகிய ஈகியர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் இன உணர்வு மிக்க நடனங்கள் , எழுச்சிப்பாடல்கள், பேச்சுக்களுடன், லவுசான் மாநகர சபை கல்விஅமைச்சர் திரு. Oscar Tosato அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து காலத்திற்கேற்ப கருப்பொருளைத் தாங்கிய கதையும் கானமும் நிகழ்வானது அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு உணர்வுடன் நிறைவுபெற்றது.அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும் என்று தீயில் கருவாகு முன் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் எம்முன் விட்டுச்சென்ற பணியை வலுப்படுத்திச் செயற்படுத்த 21.09.2015 அன்று ஐ.நா சபை முன்றல் முருகதாசன் திடலில் தமிழர்களாகிய நாம் அனைவரும் அணிதிரண்டு தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்க முரசறைவோம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உரிமையோடு இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
unnamed-1unnamed-2unnamed-3unnamed-4

unnamed-5unnamed-6unnamed-7unnamed-8

unnamed-9unnamed-10unnamed-11unnamed-12

unnamed-13unnamed-14unnamed-15unnamed-16

unnamed-17unnamed-18

    No comments:

    Post a Comment