மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்புளுவன்சா என்1எச்1 வைரஸ் தாக்கம் கடந்த மாதம் வரையில் அதிகம் பாதித்துள்ளது. இதில் மட்டக்களப்பில் ஒரு கர்ப்பிணிப் பெண் மரணம் அடைந்துள்ளார் என கிழக்கு பல்கலைக்கழக
மருத்துவ பீடத்தின் விரிவுரையாளரும் மற்றும் நுண்ணியல் உயிரினவியலாளருமான வைத்தியகலாநிதி வி.ஆர். வைதேகி தெரிவித்தார். மாணவர்கள் மத்தியில் இன்புளுவன்சா எச்1என்1 வைரஸ் தொற்று, தாக்கம் தொடர்பாக அறிவூட்டும் விழிப்புணர்வுக் கூட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு வாசிகசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில் – நாடெங்கிலும் இதுவரையில் இன்புளுவன்சா என்1எச்1 தாக்கத்தினால் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 50 பேர் மரமடைந்துள்ளனர். இதில் 10 பேர் கர்ப்பிணிப் பெண்களாவர். கடந்த வருடம் இலங்கையில் அதிகமாக நோய்த் தாக்கம் காணப்பட்டதாகவும் பின்பு விழிப்புணர்வு ஏற்பட்டுதனால் தற்போது குறைவடைந்து காணப்படுகின்றது. வடகீழ் மற்றும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலங்களில் தொற்று அதிகமாகக் காணப்படுகின்றது. இன்புளுவன்சா என்1எச்1 ஒருவகை வைரஸ் காய்ச்சலாகும். இது ஏ.பி.சி என்னும் 3 வைரஸுகள் காணப்படுகின்றன எனவும் ஏ மற்றும் வி இனால் பாதிப்பு எனவும் சி வைரஸ் பறவைக் காய்சலுக்குரியது இனால் பாதிப்பு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment