கம்பஹா, உடுகம்பொல, கல்பொத்த பகுதியில் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரினதும், பெண்ஒருவரினதும் சடலங்கள் சிதைவுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் கணவன் மனைவி எனவும், சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், மரணத்துக்கான காரணம் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேநேரம் குறித்த வீட்டில் 4 வயது பெண் குழந்தையொன்று இருந்துள்ளதாகவும், அக்குழந்தை தொடர்பான தகவல்கள் கண்டறியப்படவில்லை எனவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
No comments:
Post a Comment