மீற்றர் வட்டிக்கு வாங்கிய பணத்தை செலுத்த முடியாமல் 2 வருடங்களிற்கு மேலாக தலைமறைவாக உள்ள மகனை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்து தருமாறு உருக்கமாக கேட்டுள்ளார் தாயாரொருவர். இந்த சம்பவம்
யாழ்ப்பாணம் வடமராட்சியில் நடந்துள்ளது. மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குவோர் குறித்து காங்கேசன்துறை பொலிசார் நடத்தி வரும் விசாரணையில் வெளிப்பட்டுவரும் அதிர்ச்சி தகவல்களின் வரிசையில் இந்த சம்பவமும் வெளியாகியுள்ளது.
கரவெட்டி பொன்னான்வளவைச் சேர்ந்த ஒருவர் 2013இன் ஆரம்பத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடை ஆரம்பிப்பதற்காக 3 இலட்சம் பணாத்தை வாங்கினார்.கடை ஆரம்பித்த சில மாதங்கள் வரை வட்டிப்பணத்தை ஒழுங்காக செலுத்தி வந்தார். முதலை வழங்க முடியவில்லை. கடையிலிருந்து எதிர்பார்த்த இலாபம் கிடைக்காததால் வட்டியையும் நாளடைவில் கட்ட முடியாமல் போனது.
வட்டிக்கு பணம் கொடுத்தவர், கடைக்கு சென்று தனது பணத்தை கேட்டு தினமும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல் தனது நண்பர்களிடம் பணம் வாங்கி கொடுத்தார். அந்த பணமும் வட்டியை அடைக்கத்தான் போதுமாக இருந்தது. முதலை அடைக்க முடியவில்லை. இந்த நிலையில் நண்பர்களும் பணத்தை கேட்டு நச்சரிக்க, இரண்டு பக்கமும் அவாங்கும் மத்தளமானார்.இதனால் மனவிரக்தியுடன் திரிந்தவர், திடீரென காணாமல் போய்விட்டார்.இதன்பின்னர் கடன்காரர்கள் காணாமல் போனவரின் தாயாரை நச்சரிக்க தொடங்கினார்கள். வட்டி, வட்டியின் வட்டி, முதல் என எல்லாமுமாக சேர்ந்து 30 இலட்சம் ரூபாவை தருமாறு வட்டிக்காரர் கேட்கிறார். இந்தநிலையில், தனது மகன் எங்கிருந்தாலும் தன்னைக்காண வருமாறு அவர் கண்ணீருடன் கோரியுள்ளார்.
நெல்லியடி பகுதியில் மீற்றர்வட்டிக்காரர்களின் இராச்சியம் அதிகரித்து காணப்படுவதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவையடுத்து காஙகேசன்துறை பொலிசார் இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment