September 11, 2015

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு கடன் சுமை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அதிக கடன் சுமையுடன் இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

அங்கு செயற்பாடுகளை முன்னெடுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.பொதுவாக முன்னாள் போராளிகளுக்கான நிரந்தர வாழ்வதாரம் என்ற ஒன்று இல்லை.
இருப்பினும் அவர்களின் வீடமைப்புகளுக்காக சிறிலங்காவின் அரசாங்கம் கடன்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தது.தற்போது இந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பெரும் சுமையை தாங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலமையினால் அண்மையில் மட்டக்களப்பில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment