இந்துக் கடவுளை அவமதித்த வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி உச்சநீதிமன்றத்தில் திடீரென்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான ஒரு வணிகம் சம்பந்தப்பட்ட ஒரு மாத இதழில் டோனியை கடவுள் விஷ்ணு போல சித்தரித்து படம் வெளியிடப்பட்டு இருந்தது.
அந்த படத்தில் டோனிக்கு பல கைகள் இருப்பது போன்றும், ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபார பொருட்களை டோனி வைத்து இருப்பது போலும் விளம்பரப்படுத்தப்பட்டது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த விளம்பரம் இந்து மதத்தை அவமதிப்பதாக இருகின்றது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதுமட்டுமல்லாது கர்நாடக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து டோனி மற்றும் பத்திரிகை வெளியிட்டாளரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் டோனி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்க செய்துள்ளார். அதில், ’நான் கடவுள் விஷ்ணு போல் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவில்லை.
அந்த புகைப்படம் வெளிவந்த பிறகுதான் தனக்கு அதுபற்றி தெரியும். யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. இது தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் எந்த கிரிமினல் நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
டோனியின் இந்த மனு வருகிற 14ம் திகதி விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment