ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நண்பர் ஒருவரால், கோடரியால் வெட்டப்பட்டு படுகாயடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் பொலன்னறுவையில் இடம்பெற்றுள்ளது. கோடரியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை - ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்தவை தாக்கினார் எனக் கூறப்படும் லக்மால் என்பவர் பொலன்னறுவை பக்கமுன என்ற இடத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தநிலையில் அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment