September 17, 2015

16 இந்திய மீனவர்கள் நேற்று மாலை விடுதலை!

இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயத்தின் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட 16 மீனவர்கள் நேற்று மாலை, இந்திய காரைக்கால் துறைமுகத்தினை சென்றடைந்தனர்.
இவர்களில் 9 மீனவர்கள் நாகப்பட்டினத்தினையும், நான்கு பேர் இராமநாதபுரத்தினையும் மற்றும் மூன்றுப் பேர் புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் எல்லையினை தாண்டிய விவகாரத்தின் அடிப்படையில் 16 மீனவர்கள் செப்டம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நாட்களுக்கு பின் பிரதமரின் இந்திய விஜயத்தினை முன்னிட்டு இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
விடுவிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி அவர்களது கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மற்றும் ராமநாதபுரம் மீனவ பிரதிநிதிகள், இலங்கையின் பாதுகாப்பில் இருக்கும் இவர்களுடைய 30 மீன்பிடி படகுகளை மீற்க, இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment