September 17, 2015

தமிழ்நாட்டில் மீண்டும் ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சி அலை!

இலங்கை போர்க்குற்றம் குறித்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சி அலையொன்று மீண்டும் உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது.
இதன் ஒருகட்டமாக இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைத் தமிழ்புலிகள் கட்சி, தமிழர் விடுதலைக் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும் இலங்கை- இந்திய நட்புறவில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே இலங்கை போர்க்குற்றம் குறித்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரி தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் ஓன்று நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment