September 1, 2015

வித்தியா படுகொலை;குற்றவாளிகளுக்கு 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரைக்கும்
விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெலின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று செவ்வாக்கிழமை மீண்டும் விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சந்தேக நபர்களிடம் இருந்து 2 ஆவது முறையாக பெறப்பட்ட இரத்த மாதிரிகள் யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த இரத்த மாதிரிகளையும் ஏற்கனவே சம்பவ இடத்தில் பெறப்பட் சான்றுப் பொருட்களையும் ஜீன்ரெக் என்னும் தனியார் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறும், அதன் அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் வழக்கு விசாணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதவான் தொடர்ந்து கட்டளை பிறப்பித்திருந்தார்.



No comments:

Post a Comment