திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் மீள் குடியேற்றக் கிராம மக்கள் குடிநீர் மற்றும் கொள்கலன் பிரச்சினை காரணமாக தமது காணிகளுக்குள் இருப்பது கடினமாகவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
சம்பூரில் குடியமர்ந்த போதிலும் அடிப்படைத் தேவைகள் பூரணமாக்கப்படவில்லை என சம்பூரில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக் கள் கூறுகின்றனர்.
இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராம மக்கள் குடிநீர் மற்றும் கெண்டேனர் பிரச்சினை காரணமாக தமது காணிகளுக்குள் இருப்பது கடினமாகவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன சம்பூருக்கு விஜயம் செய்து மக்களிடம் உறுதிப்பத்திரங்களை கையளித்தார்.
குடிநீர்ப்பிரச்சினை, மலசலகூடம் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான குடி நீரைப் பெற்றுக்கொள்வதில் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை மூதூர் பிரதேச செயலகத்தினால் பௌசர்கள் மூலம் தாங்கிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்ற போதிலும் அவை போதியளவில் இல்லை.
அத்துடன் நீரைப் பெற்றுக்கொள்ள தொலை தூரம் செல்ல வேண்டியுள்ளதுடன், கிணறுகளும் பழுதடைந்துள்ளதனால், அவற்றில் நீரைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் சில இடங்களில் கிணறு வசதிகள் இல்லை என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மலசல கூட வசதிகள் குறைவாகக் காணப்படுவதனால் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
கொள்கலன்களை உடனடியாக அகற்றவும் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட காணி யைப் பாதுகாப்பதற்காக இப்பகுதியில் அமைக்கப்பட்ட கொள்கலன்களை உடனடியாக அகற்றித் தருமாறும் மக்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் தமது காணிகளுக்குள் கொள்கலன்கள் இருப்பதனால் குடிசை கட்டுவது கூட சிரமமாகவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அசாதாரண சூழ்நிலை காரணமாக 2006 ஆம் ஆண்டு சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து, கட்டைபறிச்சான், மணல்சேனை, கிளிவெட்டி, பட்டித்திடல் ஆகிய நான்கு அகதி முகாம்களில் மக்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். கடந்த 10 வருடங்களாக இம்முகாமில் தங்கவைக் கப்பட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த இடமான சம்பூருக்கு குடியேற்றம் செய்யப் பட்டனர்.
இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தமது சொந்த இடமான சம்பூரில் குடியமர்ந்த போதிலும் அடிப்படைத் தேவை கள் பூரணமாக்கப்படவில்லை என தெரிவிக் கின்றனர்.
No comments:
Post a Comment