மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும்
கொய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஹான் ஏய் ஜின் ஆகியோரால் சுற்றுலா தகவல் மையத்தினை திறந்து வைத்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ஸினால் சுற்றுலா தகவல் நிலையத்தின் ஒரு பிரிவான உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.
அத்தோடு கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களங்களின் ஆணையாளர் எம்.வை.சலீம் துவிச்சக்கர வண்டிகள் கூடத்தை திறந்து வைத்தார் மற்றும் சுற்றுலா புகையிரத வண்டியை ஆசிய பவுண்டேசன் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டினேஸா டி சில்வா விக்கிரமநாயக்கா ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பின் மரபுரிமைமிக்க இடங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சிக் கூடத்தை ஆசிய பவுண்டேசன் பிரதிக் குழுத் தலைவர் ஏ.சுபாகரன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்; யு.எல்.எம்.அஸீஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
புகைப்படக் கலைஞர்களுக்கான சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி வைத்தார். இதன்போது மட்டக்களப்பின் பாரம்பரியம், கலை மற்றும் கலாசார விழுமியங்களை வெளிக்கொண்டு வரும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment