August 29, 2015

அம்பலமானது புதியதலைமுறை மீதான அழுத்தம்!

யாழிலுள்ள இந்திய துணைதூதுவராலய அழுத்தத்தையடுத்தே கருணாவின் செவ்வியினை இந்திய தொலைக்காட்சியான புதிய தலைமுறை பதிவு செய்ததுடன் அதனை ஒளிபரப்பியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

தேர்தல் கால அறிக்கையிடலிற்காக வருகை தந்திருந்த புதிய தலைமுறை அணி பிரச்சார நடவடிக்கைள் முடிவுற்றதும் தனது பயணத்தை பயன்படுத்தும் வகையினில் பிரச்சார நடடிக்கைகள் அற்ற 15ம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பினில் அரசியல் தலைவர்கள் மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்ட விவாதமொன்றை யாழ்.ஊடக அமையத்தினில் பதிவு செய்திருந்தது.

அவ்வொளிப்பதிவினில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

எனினும் அதனை தேர்தல் பரப்புரை நடவடிக்கையென சுமந்திரன் கும்பல் தேர்தல் ஆணையாளர்,இந்திய தூதர்,காவல்துறை அதிகாரிகளென அனைத்து மட்டங்களிலும் வதந்தி பரப்ப அடுத்த 24 மணி நேரத்தினுள் புதிய தலைமுறை அணியை நாட்டைவிட்டு வெளியேற்ற தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஓளிப்பதிவு நடந்து கொண்டிருந்த வேளை காவல்துறையால் யாழ்.ஊடக அமையம் சுற்றிவளைக்கப்பட்டு விசாரணைகள் நடந்தன.எனினும் அதுவொரு முன்கூட்டிய ஒளிப்பதிவென உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சுற்றிவளைப்பு விலக்கப்பட்டது.தேர்தல் ஆணையாளரது பணிப்பும் கைவிடப்பட்டது.பதிவு இணையச் செய்தி

எனினும் அடுத்த தினம் யாழினிலுள்ள இந்திய துணைதூதுவராலயத்திற்கு அழைக்கப்பட்ட புதியதலைமுறை குழுவினர் தூதர் நட்ராஜினால் மிரட்டப்பட்டனர்.ஒளிப்பதிவு பற்றி விளக்கிய வேளை அதனை ஒளிபரப்ப வேண்டாமென கேட்டுக்கொண்ட தூதர் கருணாவை சந்தித்து பேட்டியெடுக்க பணித்துள்ளார்.
ஏற்கனவே இவ்வாறு வருகை தந்த தந்தி தொலைக்காட்சியை கேபியின் பேட்டியை எடுத்து வெளியிட வைத்த உத்தியை இம்முறை கொழும்பின் புறகரான நுகேகொடவிலுள்ள கருணாவை தனது பயணத்தின் கடைசிபதிவு இணையச் செய்திகழ்வாக பேட்டியெடுத்து ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
13வது திருத்த சட்டத்தின் கீழான மாகாணசபையினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்ற அரசியல் தலைவர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்களது குரல் கிடப்பினில் போடப்பட்டுள்ளது.
  நன்றிபதிவு 

No comments:

Post a Comment