என்அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய கிளிநொச்சி வாழ்மக்களுக்கு, என் இனியமாலை நேர வணக்கம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிளிநொச்சி மண்ணின் மீதுஇலங்கை
அரசும் அதன் படைகளும்மேற்கொண்ட கோரதாண்டவங்களின் பாதிப்பால் விடுதலை உணர்வு நோக்கி உந்தப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களில் நானும்ஒருத்தி. அந்தநாட்களில் இந்தவீதிகள் வழியே நான் பயணிக்காத நாட்களே இல்லை எனலாம். அந்தக்காலப்பகுதியில்இந்த வீதி வழியே நான் பயணித்த உந்துருளி ,அதன் நிறம் ரகம்என்பவற்றை இன்றும் இங்குள்ள பலர் நினைவில் வைத்திருப்பது உண்மையில் மனதிற்கு மகிழவைத்தருகிறது.
எத்தனையோ வசதிக்குறைபாடுகள் இருந்திருந்தாலும் 90 களிற்குமுன்பு நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவுத்தன்மை எப்போதும் எம்கண் முன்னே நிழலாடிக்கொண்டு தான்இருக்கும். இதனையாரும் மறுக்கப்போவதில்லை.சின்னச்சின்ன வீடுகள் கட்டிநாம் இருந்த ஊர்களது நிலைமை 2009 களின்பின் முற்றுமுழுதாக மாறிப்போனது. போரழித்த கிளிநொச்சி மண்ணில் இருந்து வேரிழந்து போய் சொந்தபூமியிலே ஏதிலிளாக ஆக்கப்பட்டோம்.எமது உரிமைப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நிர்க்கதியாக நின்ற எங்களிற்கு ஆயிரம் தலைமைகள். எங்களைநசுக்கிய வெற்றிக்களிப்பில் 2010இல்ஜனாதிபதித்தேர்தலும் அதனைத் தொடர்ந்து நான்குமாதங்களில் பொதுத்தேர்தலும் நடைபெற்றது.
நாங்கள்அதைப்பெற்றுத்தருவோம்இதைத்தருவோம்எனப்எத்தனையோவிதமானதேர்தல் வாக்குறுதிகளுடன்பலர்தேர்தல்களத்தில்முகம்காட்டினர். அந்தவேளையில்பின்னடைவுக்குள் தள்ளப்பட்ட தமிழர் உரிமைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வார்கள், எங்களது உரிமைகள் பற்றிப் பேசுவார்கள், எங்களது அரசியல் மற்றும் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவார்கள் என்று கருதப்பட்ட ஒருதரப்பினர்க்கு அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு, விடுதலைப் புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே காரணத்திற்காகமக்கள் அவர்களுக்கு வாக்களித்து தங்கள் பிரதி நிதிகளாக பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து வந்த உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் எதுவுமே இல்லாத வெற்றுக் கூடுதான் மாகாண சபை என்று அறிந்தும் அந்த்த் தேர்தலிலும் மக்கள் தமது வாக்குகளை அளித்து அவர்களை வெல்ல வைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன?
30ஆண்டுகளுக்குமேலாக எங்கள் மக்கள் எதற்காக இத்தனை விலைகொடுக்க நேர்தது? பல்லாயிரக்கணக்கான மாவீர்ர்களின் ஈகம் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? இன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான போராளிகளதுஎதிர்காலம்கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது எதற்காக? இவ்வளவு ஈகங்களையும் தியாகங்களையும் ஈந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இனவிடுதலைப்போராட்ட்த்தின் ஜனநாயகவடிவம் தொடரவேண்டும் என்றநோக்கத்தில் எங்களுடைய பிரதிநிதிகள் என்று நாம் யாரைக் கருதிப்பாராளுமன்றம் அனுப்பினோமோ அவர்கள்எங்கள் பிரதிநிதிகளாக அல்லாமல் அயலாதிக்கசக்திகளின் பிரதிநிதிகளாக மாறிநிற்பதை நீங்கள் அறிவீர்கள். இதனை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
யுத்தம்முடிவடைந்து 6 வருடங்கள் கடந்தநிலையில் இன்றுவரை எமது மக்களது அரசியல் தீர்வுகள் தொடர்பிலோ அல்லது அவர்களது வாழ்வியல் சுதந்திரம் பற்றியோ எந்தவிதமான ஆக்கபூர்வமான விடயங்கள் எங்கள்மக்கள் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டனவா என்றால் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர்சம்பந்தன்ஐயாகூறுகிறார்.
20 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியினைப் பெற்றுக்கொள்ள ஆணைதருமாறு.20 ஆசனங்களைப் பெற்று இவர் எதைப்பேரம் பேசப்போகின்றார்? அயலாதிக்கசக்திகளின் நலங்களிற்காக எங்கள் உரிமைகளைப் பேரம் பேசுவாரே தவிர எங்களது உரிமைகளுக்காக ஒருபோதும் அவர் பேரம் பேசப்போவதில்லை என்பதுவெளிப்படை. இவர் எதிர்வரும் 2016 ஆண்டின் முடிவிற்குள் எமதுபிரச்சனைகளிற்கு தீர்வுகாணப்படும் என்று சம்பந்தன்ஐயாஅவர்கள்கூறியிருப்பதாகபத்திரிகையில்ஒருசெய்திவெளிவந்திருந்த்து.
தொடர்ந்துஅரசாங்கத்தில்அங்கம்வகிக்கும்இருபேரினவாதக்கட்சிக்களும்ஒற்றையாட்சிக்குள்தான்தீர்வுஎன்றவெளிப்படையாகவும்துணிச்சலாகவும்அறிவித்திருக்கின்றநிலையில்சம்பந்தன்ஐயாயாருடன்பேசிஎங்களுக்குத்தீர்வை 2016க்குள் பெற்றுத்தரப்போகின்றார் என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும். இதிலிருந்து ஒன்றை எம்மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஏற்கனவே வழங்கிய ஐந்துவருடங்கள் வீணாக்கப்பட்ட நிலையில் இன்னும் ஒருஐந்து வருடங்களையும் கொடுத்து தமிழ்தேசியக்கூட்டமைப்பின் காலநீடிப்பு அரசியலுக்குத் துணைபோகவேண்டுமா? அரசியல் தீர்வுதான் எட்டப்படவில்லை. மக்களது வாழ்வியலில் மாற்றம்ஏற்படுத்தப்பட்டதா?
புலம்பெயர்உறவுகளின்எண்ணிக்கையற்றநிதிபங்களிப்புஎந்தவிதமானதிட்டமிடல்களுமின்றி, தூரநோக்கின்றி அவரவரது சுயலாப அரசியல் நோக்கங்கள் கருதி எப்போதும் பிறறிடம் கையேந்திநிற்கும் சமூகத்தினை உருவாக்குவதில்தான்செலவிடப்படுகிறது.அந்த வகையில் ஐந்துவருடங்களையும் சுகமாககடத்தி விட்டுதற்போது விதம்விதமான விளம்பரங்கள் , உருவேற்றும் வாக்கியங்கள் மூலம் உங்களை நாள்தோறும் சந்தித்து வாக்குக் கேட்கிறார்கள் .ஆகவே மக்களாகியநாங்கள்சுதாகரித்துக்கொள்ளவேண்டியநேரம்இது.
இந்த இடத்தில் எங்கள் அனைவராலும் மதிக்கப்படுகின்ற மாண்புமிகு முதலமைச்சர்சீவிவிக்னேஸ்வரன் அவர்களது அறிக்கையின் ஒருபகுதியினை உங்களுக்கு அறியத்தருவது காலத்தின்தேவை என்பதனால் அதனை இங்கே முன்வைக்கின்றேன். அவர்கூறுகிறார் எனது வடக்குக்கிழக்கு மாகாணஅன்பார்ந்தசகோதரசகோதரிகளே!இளைஞர்கள், யுவதிகளே! தேர்தலில்வாக்களிப்பதென்ற உங்களது ஜனநாயகக்கடமையினை நிறைவேற்ற முன்வருவதோடுதமிழ்பேசும்மக்களின்நலனுக்காய்அணிதிரண்டுசென்றுவாக்களிக்குமாறுகேட்டுக்கொள்கின்றேன்.
இம்மாதம் 17ந்திகதி; காலையில் எந்தக்கட்சிக்கு நீங்கள் வாக்களிக்கப்போகின்றீர்கள் என்பதை முதலில் மனதில் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அக்கட்சி எமதுதனித்துவத்தையும் சுயநிர்ணயத்தையும் உறுதிப்படுத்தும்கட்சியாக இருக்கவேண்டும் .முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்பின்னுந்தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்றகோட்பாட்டில் உறுதியாக இருந்துவருகின்ற கட்சியாக இருக்கவேண்டும் .தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்குநீதிதேடுவதற்குப்பின்னிற்காதகட்சியாக, சுதந்திரமான சர்வதேசவிசாரணை என்றவிடயத்தில்உறுதியுடன் உள்ளகட்சியாகத் திகழவேண்டும்.
தமிழ்மக்களின்கௌரவம், சமத்துவம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் சமரசம் செய்யாதகட்சியாக இருக்கவேண்டும் .போருக்குப்பின்னரானஇந்தச்சூழலில், செயற்த்திறன் மிக்கபுனருத்தாரணபணிகளை முன்னெடுக்கின்ற கட்சியாக இருக்கவேண்டும். காணமல் போகச்செய்யப்பட்டோருக்கு என்னநேர்ந்தது என்பதைஅறிவதற்காகவும், அரசியல்கைதிகள் விடுதலைக்காகவும் இதயசுத்தியுடன் செயற்படுகின்ற கட்சியாகஇருக்கவேண்டும்.
சரணகதி யடையாமல், எமது தனித்துவத்தையுஞ் சுயநிர்ணயஉரிமையையும் வலியுறுத்திவரும் கட்சியை அடையாளங்காணுவது உங்களுக்குச் சிரமம் அளிக்காது என்று எண்ணுகின்றேன். அடிப்படைக்கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் கட்சியில் இருக்கும் நேர்மையான, கொள்கையில் உறுதியுடைய, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய, தூரநோக்குப்பார்வைகொண்ட, எத்தருணத்திலும் விலைபோகாத மனோதிடம்கொண்ட வேட்பாளர்களை மனதில்வைத்துக்கொள்ளுஉங்கள். அதாவது அவர்களின் இலக்கங்களை மனதில்பதிந்து வைத்திருங்கள் .அன்றையதினம் காலை ஏழுமணிக்கே தேர்தல்களம் செல்லுங்கள் .தவறாதுவாக்களியுங்கள். வடகிழக்குமாகாணங்களில் தான் மிகச்சிறந்த வாக்காளர் பங்குபற்றல்நடைபெற்ற தென்றநற்செய்திக்குவலுவூட்டுங்கள்.”
எம்அருமைமக்களே, வடக்குமாகாணமுதலமைச்சர்மாண்புமிகுசீவிவிக்னேஸ்வரன்அவர்கள் எம்தமிழ்மக்களுக்குக்கிடைத்தஅரியதோர்பொக்கிசம்.அவர்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள கட்சிகளால்அரசியல்வாழ்க்கைக்குக்கொண்டுவரப்பட்டுதற்போதுவடக்குமாகாண முதலமைச்சராகஇருந்தபோதிலும்கட்சிவேறுபாடுகளின்றிஅனைவராலும்மதிக்கப்படுகின்ற ஒருநீதிமான். அவரது நிலைப்பாடு ஒருபோதும் தவறாது .இந்தத்தேர்தலில் யாரைநீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுவென்றுஅவர்ஒருசெய்திகூறியுள்ளார். அவரதுகருத்துக்கள் யாரைக் குறிக்கின்றன என்பது வெளிப்படை உண்மை.இதுமுடிவு செய்யவேண்டியநேரம். நாங்கள் ஒருதிருப்பு முனைக்காலகட்ட்த்தில் இருக்கின்றோம்.
தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பதுபெயரில் மட்டும் தான் இருக்கின்றது. அங்கிருக்கும் பங்காளிக்கட்சிகள் யாருமே தமது தனித்துவங்களோடுதான் இருக்கின்றார்களே தவிர ஒரு பொதுத் தன்மைக்குள் இல்லை. இந்த இடத்தில் மாண்பு மிகு முதலமைச்சர் திரு சீ.வி விக்னேஸ்வரன் அவர்கள் தான் ஏன் இந்தத் தேர்தல் விடயத்தில் நடு நிலைமை வகிக்க நேர்ந்ததுஎன்பது பற்றி விபரித்துள்ளார். அவர் கூறுகிறார் “இம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச்சார் பற்ற நடுநிலைத்தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன். ஆரோக்கியமான அகமுரண்பாடுகள் அவசியமானவையாயினும்கூட, ஒரேகட்சிக்குள் இருந்து கொண்டு ஒரேகொள்கைக்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொண்டும், வசைபாடிக்கொண்டும், அரசியல்நாகரீகம் அற்ற முறையில் ஒருவர் மற்றவருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமை யினைக் காணும் போது பக்கச் சார்பற்ற நடுநிலைத்தன்மை என்ற எனது முடிவுசரியானது என்றேநான்கருதுகின்றேன்”
எம்மக்களாகிய நீங்கள் முதலமைச்சர் அவர்களின் கூற்றை உற்றுநோக்கவேண்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரிற்குள் இருக்கும் இவர்களுக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லை .இவர்களிற்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளிற்கு தீர்வு காணப்படவில்லை. அப்படியிருக்கையில் இவர்கள் எங்களது மக்களிற்கான சரியான பிரதிநிதிகள் என்றுநாங்கள்எவ்வாறுஏற்றுக்கொள்ளமுடியும்.இவர்களுடன்சேர்த்து, காலத்திற்கு காலம் எங்களை அழித்து வந்திருக்கும் இரண்டு பேரினவாதக்கட்சிகள் சார்பிலும் அபிவிருத்தி செய்வோம் எனக்கூறிக்கொண்டு உங்களிடம் வேட்பாளர்கள்வருகின்றார்கள்.
அபிவிருத்திஒன்றுதான்எங்களுக்குநோக்கமாயின்எதற்காகநாங்கள்இத்தனைவிலை கொடுத்தோம்என்றகேள்விநிச்சயமாகஉங்களுக்குள்எழுந்திருக்கும்என்றுநாம்நம்புகின்றோம். எங்களது பிரச்சனைகளப் புரிந்துகொண்டவர்கள், எங்கள்அவலங்களைஅறிந்தவர்கள், எங்கள் துன்பங்களில் பங்குகொண்டவர்கள்யாருமே இந்தப் பேரினவாத சக்திகளோடு எந்தக்காலத்திலும் இணைந்திருக்கப்போவதில்லை.ஏனென்றால் அவர்களது குருதியில் கலந்திருப்பது தமிழர் உரிமையின் தூயகொள்கை. அப்படியானால்இப்பொழுது இவர்களுடன் இணைந்து வருபவர்கள்யார்? நிச்சயமாகஅவர்கள்எங்களுக்குரியவர்கள்அல்ல.
அத்துடன் நான்மேலும்ஒருவிடயத்தைக்கூறவிரும்புகின்றேன், அண்மையில் கிராம ரீதியான பரப்புரைகள் மேற்கொண்டபோது பலகட்சிகளையும் சேர்ந்தபரப்புரை இளைஞர்கள் யுவதிகளைச்சந்தித்து உரையாடியிருக்கின்றேன். நல்லஒரு ஆரோக்கியமான உரையாடலாகவே நான் அதைப்பார்த்தேன். அதனடிப்படையில் எமது தமிழ்சமூகத்தின் சிறந்தவளமான இளைஞர்களை தமது சுயலாப அரசியல் நோக்கங்களிற்காக எவ்வாறு திசைதிருப்பி விடப்படுகிறார்கள் என்பதைநான்தெளிவாகஅறிந்துகொண்டேன். ஒருமக்கட் சமூகத்தை விரும்பத்தகாத வழிகளில் தமதுதனிப்பட்ட நலங்களிற்காக்திசைதிருப்பும் அரசியல்சக்திகள் எங்கள் பிரதிநிதிகளாக அமைவதை நாங்கள்எவ்வாறுஅனுமதிக்கலாம்? ஆகவே எங்கள் அன்புக்குரியமக்களே, வாக்குஎன்றஆயுதம்உங்கள்கைகளில்இருக்கின்றது. மாற்றத்தை ஏற்படுத்த உங்களால் மட்டுமேமுடியும். ஆகவே எங்கள் தலைவிதியினை மாற்றியமைப்பதற்கு சரியானபாதையினைத்தீர்மானியுங்கள்.
இங்கேஇன்றுஉங்கள்முன்தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின்சார்பில்வந்திருக்கும்நாங்கள் உங்களிடம்எதனையும்தேர்தல்காலவாக்குறுதிகளாகமுன்வைக்கப்போவதில்லை. ஆனால் எந்த இலட்சியத்திற்காக செயற்கரிய ஈகங்களை மேற்கொண்டு இன்றுமீளாத்துயிலைக் கூடஅமைதியுடன் அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அந்தமகாத்மாக்களின் சுயநல நோக்கமற்ற இலட்சியத்தைச்சாத்தியமாக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பினை எம் மக்களுடன் இணைந்து நாங்களும் சுமந்து நிற்கின்றோம் என்பதனை எங்கள் நாவினால் அல்ல ஆத்மாவிலிருந்து கூறிக்கொள்ள விளைகின்றோம் .ஆகவே அதற்கான சகலவழி முறைகளையும் தேர்தல் உட்பட்ட சகல ஜனநாயக ரீதியிலான அமைதிவழிப்போராட்ட முன்னெடுப்புக்களில் உங்களுடன் கைகோர்த்துக் கொள்ளதமிழ்த் தேசியமக்கள் முன்னணியினராகிய நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம் என்று கூறிக்கொண்டு நிறைவு செய்கிறேன்.
நன்றி
வணக்கம்.


No comments:
Post a Comment