August 13, 2015

மயிலங்கரைச்சல் கிராமத்தின் தமிழ் காணிகளை சுவீகரிக்கப்பு!

மட்டக்களப்பு - வாழைச்சேனை - கோரலைப்பற்று பகுதியில் உள்ள மயிலங்கரைச்சல் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் சிங்கள குடும்பங்களுக்கு
பிரித்தளிக்கப்படவுள்ளன.

சிறிலங்காவின் இராணுவத்தினரும் காவற்துறையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கு சொந்தமான இந்த காணிகள் 1990ம் ஆண்டு பலவந்தமாக சுவீகரிக்கப்பட்டு பாதுகாப்பு தரப்பின் கீழ் காணப்படுகிறது. 

இதனை மீட்கவும், மீள்குடியேறவும் காணி உரிமையாளர்களான தமிழர்கள் பாரிய முயற்சிகளை ஈடுபட்டு அநாதராவான நிலையில் உள்ளனர்.

எனினும் அவர்களின் காணிகளை அண்மையில் இந்த பகுதியில் குடியேற்ற நவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment