August 29, 2015

ஜேர்மனி செய்தி பேஸ்புக் மூலம் இனவெறி தாக்குதல் நடத்தும் அகதிகள் எதிர்ப்பாளர்கள்: ஜேர்மனி அரசு அவசர ஆலோசனை!

ஜேர்மனி நாட்டில் பேஸ்புக் மூலம் இனவெறி தாக்குதல்கள் தீவிரம் அடைந்து வருவதை தடுக்கும் விதத்தில் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளை
சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக ஜேர்மனி அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் மீதான இனவெறி தாக்குதல்களை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அகதிகள் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து வெளியிட்டுவருவதாக அரசிற்கு வரும் புகார்கள் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஜேர்மனியின் சட்டத்துறை அமைச்சரான ஹெய்கோ மாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான இனவெறி தாக்குதல்களை நேரடியாகவும் பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்கள் மூலமாகவும் எதிர்ப்பாளர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பேஸ்புக்கில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சில கடுமையான விதிமுறைகள் இல்லாததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில், ஐரோப்பிய நாடுகளுக்கு உட்பட்ட பேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அப்போது இனவெறி தொடர்பான கருத்துக்களை பேஸ்புக்கில் தெரிவிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என ஹெய்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அமைச்சரின் தகவலுக்கு மின்னஞ்சல் பதிலளித்த பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், ஜேர்மனியில் பேஸ்புக் மூலம் பரவும் இனவெறி தாக்குதல்கள் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை ஜேர்மனி அரசுடன் பகிர்ந்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
மேலும், சமூதாய சீர்கேட்டை ஏற்படுத்தும் இனவெறி தாக்குதல்களை களைவது தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள திகதியில் அமைச்சருடன் கூட்டத்தில் கலந்துக்கொண்டு வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment