எதிர்வரும் 17 ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு தாயகத்தில் மட்டும் அல்ல புலம்பெயர் நாடுகளிலும் பெருகி வருகின்றது . புலம்பெயர் தமிழ் மக்கள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை கொடுத்து தாயகத்தில் ஒரு மாற்று அரசியல் தலைமையை கொண்டுவருவதுக்கான முயற்சியை முழுமையாக வேண்டிநிற்கின்றனர் .
கடந்த வாரங்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக சமகால அரசியல் மக்கள் கலந்துரையாடல்கள் , செயற்பாடுகள் , மக்கள் சந்திப்புகள் நடைபெற்றுவருகின்றது . இவ் ஆதரவு அலையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமக்கு ஆதரவான ஊடகங்களால் மழுங்கடிக்க செய்கின்ற அதேவேளை தமது தொடர்ச்சியான பொய்யான பிரச்சாரங்களை மக்களை ஏமாற்றும்வகையில் பரப்பிவருகின்றனர் .


No comments:
Post a Comment