August 14, 2015

வவுனியா ஓமந்தையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து (புகைப்படங்கள்)

வவுனியா ஓமந்தைப் பகுதியில் தனியார் பேருந்துமற்றும் சிறியரக கன்டர் வாகனம் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார். இதில் வவுனியா
உறக்குளம் பாலமோட்ட பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் பிறேம்குமார் (தாசன்) (வயது 33) என்பவரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை 4.30 மணியளவில் சந்தைக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற சிறியரக கன்டர் வாகனமும் தனியார் பேருந்தும் வவுனியா ஓமந்தைப் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கன்டர் வாகனத்தை செலுத்திவந்தவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே பலியானார். இதனை தொடர்ந்து உயிரிழந்தவரின் உடல் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment