August 26, 2015

தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு எதிர்க் கட்­சியே பெரும் தடை­யாக உள்­ளது!

நாட்டில் தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு எதிர்க்கட்­சியே பெரும் தடை­யாக உள்­ளது. எனவே, தேசிய அர­சாங்­கத்தை நிறு­வு­வ­தா­னது எதிர்க்­கட்­சியின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. எதிர்க்­கட்­சியின் தீர்­மா­னத்­துக்­காக நாங்கள்
காத்­தி­ருக்­கின்றோம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.இதே­வேளை எதிர்க்­கட்சி இணங்­கா­விடின் ஐக்­கிய தேசிய கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­கவும் தயா­ராக உள்­ளது. மேலும் நாட்டின் நலனை கருத்­தில்கொண்டு தமிழ்தேசியக் கூட்­ட­மைப்பும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் எமக்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.மேலும் புதிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை அமை ச்­சர்­க­ளுக்­கான பத­வி­யேற்பு இன்று அல்லது நாளை இடம்­பெ­றலாம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இந்த விடயம் தொடர்பில்ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் கபீர் ஹாஷிம் கேச­ரிக்கு தொடர்ந்து கருத்து வெளி­யி­டு­கையில்நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி பெரும்­பான்மை ஆச­னங்­களை பெற்று வெற்­றி­பெற்­றது.
ஆகவே எமக்கு ஆட்சி அமைப்­ப­தற்கு எதிர்க்­கட்­சியின் ஆத­ரவு ஒரு­போதும் அவ­சியம் ஏற்­ப­டாது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னு­டைய ஆத­ரவும் எமக்கு தேவைப்­ப­டாது. 120 ஆச­னங்­களை பெற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு நல்­கு­வ­தற்கு எமக்கு பலர் எதிர்க்­கட்சி தரப்பில் உள்­ளனர்.இருந்­த­போ­திலும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டே தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு முடிவு எடுக்­கப்­பட்­டது. நாட்­டிற்கு தேவை­யான பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை தேசிய அர­சாங்­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­க­வுள்ளோம். ஆகவே பெரும்­பான்மை ஆச­னங்கள் இருந்­த­போ­திலும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டே தேசிய அர­சாங்கம் அமைத்து ஒரு­மித்த கொள்­கை­யுடன் செயற்­பட இருந்தோம்.இதற்­காக நாம் தயார் நிலையில் இருக்­கின்றோம். அத்­துடன் இது தொடர்பில் எமது நிலைப்­பாட்­டையும் நாம் அறி­வித்­து­விட்டோம். ஆனாலும் எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இதற்கு இடை­யூறு விளைக்கும் வகையில் செயற்­ப­டு­கின்­றது. அமைச்சு பத­வி­களை பகிர்­வதில் குழப்பம் விளை­விக்­கின்­றனர். எவ்­வா­றா­யினும் இன்று அல்­லது நாளை அமைச்சு பதவி வழங்­க­வுள்ளோம்.
இந்­நி­லையில் தேசிய அர­சாங்கம் அமைத்து நாட்­டிற்கு தேவை­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதா இல்­லையா என்­பது தொடர்­பா­ன­இ­றுதி சிறி­லங்கா சுதந்­திரக் கட­சியின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. எனவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­ட­மி­ருந்து சாத­க­மான முடிவு கிடைக்­க­பெறும். இல்­லையேல் தனி­யாக ஆட்சி அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி சந்­தர்ப்பம் உள்­ளது.நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சிறந்த வாயப்பு கிடைத்துள்ளது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவும் எமக்கு அவசியமாகும். எமக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் 120 ஆசனங்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை கொண்டு செல்வோம் என்றார்.

No comments:

Post a Comment