யேர்மனியில் Karlstruhe நகரில் அமைந்துள்ள உலகளாவிய ரீதியில் பிரபல்யமான கலாசார நிறுவனத்தில்( ZKM | Zentrum für Kunst und Medientechnologie ) புதிய தேசம் எனும் தலைப்பின் கீழ் தமிழீழம் கண்காட்சி
அமையப்பெற்றுள்ளது .குர்டிஸ்தான் , திபெத், உய்குர் என ஏனைய நாடுகளின் கண்காட்சிகளும் அங்கு அமையப்பெற்றுள்ளது . இக் கண்காட்சி எதிர்வரும் 5.09.2015 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக 3 மாதங்கள் மக்கள் பார்வையிட வாய்ப்புண்டு .
அமையப்பெற்றுள்ளது .குர்டிஸ்தான் , திபெத், உய்குர் என ஏனைய நாடுகளின் கண்காட்சிகளும் அங்கு அமையப்பெற்றுள்ளது . இக் கண்காட்சி எதிர்வரும் 5.09.2015 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக 3 மாதங்கள் மக்கள் பார்வையிட வாய்ப்புண்டு .
தமிழீழம் கண்காட்சில் தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல யேர்மன் மொழியிலான நூல்கள் மற்றும் ஆவணங்கள் , தமிழீழம் வைரைபடம் , தமிழீழ தேசியக்கொடி ,போரின் வடுக்களை எடுத்துரைக்கும் நிழற்படங்கள் மற்றும் மலரப்போகும் புதிய தமிழீழ தேசத்துக்காய் தங்கள் இன்னுயிர்களை அர்பணித்த மாவீரர்களின் துயிலும் இல்லத்தின் மாதிரி வடிவமும் வைக்கப்பட்டு உள்ளது .
அத்தோடு தமிழீழம் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் கணணியில் வருகை தரும் பார்வையாளகள் http://new-nations.net/ எனும் இணைய முகவரிக்கு சென்று tamileelam.te பக்கத்தில் மேலதிகமான தகவல்களை ஆராய வாய்ப்புகளும் வைக்கப்பட்டுள்ளது .
கலாசார நிறுவனத்தில் பலதரபட்ட தலைப்புகளுக்கு அமைய ஏனைய கண்காட்சிகளும் வைக்கப்படுள்ளது ,இக் கண்காட்சியை காண 3 மாதங்களில் பல்லாயிரகணக்கான மக்கள் வருகைதர வாய்ப்பு உண்டு . அந்தவகையில் இன அழிப்பில் பாதிக்கப்பட்டு வரும் ஈழத்தமிழர்கள் ஆகிய எமக்கு ஒரு தேசம் மலர வேண்டும் எனும் போராட்டத்தின் நியாயத்தை பல்லின மக்கள் அறியக்கூடியதான அரிய வாய்பாக இது கருதப்படவேண்டும் .
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி
No comments:
Post a Comment