திருகோணமலை சல்லி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதைக் கண்டித்து, இன்று பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.கடந்த திங்கட்கிழமை கடலுக்குச் மீன்பிடிக்கச் சென்ற வேளையில் காணாமல்போன இவரது படகு, திருக்கோணேஸ்வரக் கடலிருந்து மீட்கப்பட்டு துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனதால் அவரை யாரும் கொலை செய்தார்களா அல்லது என்ன நடந்தது போன்ற காரணங்களை கேட்டு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தும் வலைகளை இல்லாமல் செய்ய வேண்டும், காணாமல் போனவரை கண்டு பிடித்து தருவதோடு அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோரி, மீனவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் சுருக்கு வலை மீன்படியை நிறுத்தக் கோரியும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கடலுக்கு சென்றிருந்தபோது காணாமல் போன அழகராசா காந்தரூபன் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் சல்லி பிரதேச மக்கள் சாலை மறியல் போராட்டம் ஒன்றை இன்று நடத்தினார்கள்.
சல்லி பிரதேச மக்கள் திருகோணமலை புல்மோட்டை வீதியின் சாம்பல் தீவு பாலத்தின் மேல் காலை 6.00 மணிக்கு மறித்து வீதியில் அமர்ந்தனர். நிலமையைச் சகமாளிக்க உப்புவெளி பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள் காவல் கடமைகளை அதிகரித்திருந்தனர்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு போராட்டத்தை நடத்தும் படியும், பொதுபோக்குவரத்துக்கு இடமளிக்குமாறும் கோரினர். இதற்கு போராட்டகாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து கைவிட மாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர். இதனால் பொலிசார் பொதுப் போக்குவரத்தினை புல்மொட்டடை வீதியில் அலஸ்தோட்டம் என்னும் இடத்தில் கன்னியா நோக்கி திருப்பி போக்குவரத்தினை நெறிப்படுத்தினர். இதனை அறிந்த போராட்டக்காரர்கள் புல்மோட்டடை வீதியின் 6வத மைல் கல் சந்தியிலும் முற்றுகையிட்டனர். இதனால் திருகோணமலைக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. பாடசாலை மாணவர்களும், பரீட்சைக்கு செலும் பரீட்சார்த்திகளும். நோயாளர்களும் இவ்வீதி ஊடாக பயணிக்க போராட்டகாரர்கள் அனுமதித்தனர்.
6வது மைல் கல் சந்தியில் இருந்து பொலிசார் தமது வாகனங்களில் பரீட்சார்த்திகளை நகரத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திருகோணமலையில் இருந்து குச்சவெளி நீதிமன்றத்திற்கு கடமைக்கான சென்ற ஊழியர்களது வாகனத்தையும். சிறைக் கைதிதிகளை அழைத்துச் சென்ற வாகனத்தையும் தொடர்ந்து பயணிக்க போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.
நிலைமையை அறிந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் உடனயடியாக ஸ்தலத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டார். இவரைத் தொடர்ந்த தமிழரசுக் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் அ.ஜதீந்திரா, தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் ஆகியோரும் ஸ்தத்திற்கு வந்த போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணகல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஆகியோரும் ஸ்தலத்திற்கு வந்து போராட்டக்காரர்கடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு கோரினர். இதற்கும் பிரதேசவாசிகள் இணங்கவில்லை. இதன் பின்னர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகள் பாவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும். காணாமல் போன மீனவரை கண்டறிய ஏற்ற ஒழுங்குகள் செய்வதாகவும் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து காலை 10.50 மணிக்கு பிரதேச மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 23.08.2015 மாலை கடலுக்கு சென்ற காந்தரூபன் நள்ளிரவு வேளை தனது நண்பருக்கும் சகோதரருக்கும் தன்னை சுருக்கு வலைமீன்பிடியாளர்கள் தாக்குவதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார். இதன் பின்னர் அவரது சகோதரர் நண்பர்களுடன் மற்றொரு படகில் கடலுக்கு சென்று காந்ரூபனை தேடிடியுள்ளனர். அப்போது அவரின் படகு தனித்த மிதப்பதையும் அதில் காந்தரூபனின் கையடக்க தொலைபேசி நொருங்கிய நிலையில் இருப்பதையும் கண்டனர். பின்னர் அவர்கள் படகினை பொலிசாரின் அறிவுறுத்தலுக்கு அமைய கரைக்கு இழுத்து வந்தனர்.
காந்தரூபனை காணாது அவரது குடும்பத்தினர் பொலிசில் முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் 7 பேரின் பெயர்களை பொலிசாருக்கு வழங்கிய போதிலும் பொலிசாரின் நடவடிகைகள் திருப்தியானதா அமைதிருக்கவிலை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யுமாறு கோரியுமே இப்போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment