கூட்டமைப்பில் சுரேஸ்பிறேமச்சந்திரனை புறம்தள்ளும் தமிழரசுக்கட்சியின் சம்பந்தன் - சுமந்திரன் தரப்பினது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. அவ்வகையில் தற்போது கொழும்பு வருகை தந்துள்ள அமெரிக்காவின்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பிலேயே இம்முறை சுரேஸ்பிறேமச்சந்நிரன் காய்வெட்டப்பட்டுள்ளார். அவரிற்கான அழைப்பு இம்முறை விடுக்கப்படவில்லையென தெரியவருகின்றது.
நடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்கில் பின்தங்கிய சுரேஸிற்கு பங்காளிக்கட்சி என்ற வகையில் தேசியப்பட்டியலில் இடம் வழங்க கோரப்பட்டிருந்தது. எனினும் சம்பந்தன் - சுமந்திரன் தரப்பினது குழிபறிப்பினால் அவர் புறந்தள்ளப்பட்டிருந்தார். இந்நிலையில் உள்ளக விசாரணை பற்றி அமெரிக்க அரசு பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் அவர்களுடன் வாதிடக்கூடிய ஒருவராக சுரேஸ்பிறேமச்சந்திரனே இருந்திருந்தார். கடந்த முறை நிஷா பிஸ்வால் உடன் இடம்பெற்றிருந்த சந்திப்பில் உள்ளக விசாரணையினையை எதிர்த்து வாதிட்டவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் மட்டுமே. எனினும் இப்போது அவரும் புறந்தள்ளப்பட்டு வெறும் ஆமாம் போடும் கும்பலொன்று சந்திப்புக்களில் பங்கெடுக்கும் சூழலொன்று தற்போது உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment