August 30, 2015

பயங்கரவாத தடை சட்டத்தை ஏன் நீக்க முடியாது - மனோகணேசன்!

பயங்கரவாத தடை சட்டத்தை ஏன் நீக்க முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 


பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கப் போவதில்லை என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

 இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள மனோகணேசன், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தகவல் பெறும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 இவ்வாறான நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சி எதிர்கட்சியாக இருந்த போது இதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்திருந்தது.

 தற்போது இந்த விடயத்தை ஏன் அவர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர் என்றும் மனோகணேசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

No comments:

Post a Comment