எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ள நீர்க்காகம் இராணுவக்கூட்டுப் பயிற்சியின்போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறக்கக்கூடும் என்றும் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இலங்கை இராணுவத்தின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
செப்டெம்பர் 03 ஆம் திகதி நீர்க்காகம் கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 06 ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து நடத்தும் இப்பயிற்சியானது, இம்முறை கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ளது.
பயிற்சி நடக்கவுள்ள பிரதேசங்களில் விமானங்கள் பறப்பதையிட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லையென்றும் இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment