பெண்ணொருவர் திருடனொரு வனை பிடித்து வீட்டுக்குள் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று புதன்கிழமை அதிகாலை கல்முனைக்குடி பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக வீட்டுரிமையாளரான குறித்த பெண் குறி ப்பிடுகையில்,
நான் தூங்கிக் கொண்டிருக்கும் சமயம் ஒரு சத்தம் கேட்டது. அப்போது கண்விழித்தேன். என் முன்னால் ஒருவர் நடமாடு வது தெரிந்தது. அவர் அங்கும் இங்கும் நடமாடி ஏதோ தேடிக் கொண்டிருந்தார். நான் நினைத் தேன். தனது பிள்ளைகள் நித்திரையில் இருந்து எழும்பி ஏதும் தேடுகின்றார்கள் என்று பின்னர் எனக்கு இவர் கள்வர் தான் என்பதை உணர முடிந்தது. எனக்கு சத்தம் போடவும் பயமாக இருந்தது. ஏதாவது நடந்து விடும் என்ற பயத்தினால் நடு ங்கிய வண்ணம் பார்த்துக் கொண்டே தூங்குவது போன்று பாசாங்கு செய்தேன். இவர் தேடுவதைப் பார்த்தால் இவருக்கு பணம்தான் தேவையாக இருந்திருக்கும் என்று மனதுக்குள் நினைத்தேன். அந்த நேரம் மேசையின் மேலே இருந்த 300ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு என் அருகே வந்து என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுப்பதற்கு கையை நீட்டியபோது வசமாக அவரை இறுக்க பிடி த்துக் கொண்டே அதன் பின் னர் சத்தம் போட்டேன். இதனிடையே எனது பிடியில் இருந்து தப்புவதற்கு எனது வலது பக்க தோள்பட்டை யில் சரமாரி யாக கடித்தான் அதனையும் பொருட்படுத்தாது. நானும் என் கணவரும் பிள்ளைகளும் சேர்ந்து அந்தக் கள்வனை கட்டிவைத்தோம் என அந்தப் பெண் தெரிவித்தார்.
வீட்டு மொட்டைமாடிக்குமேல் ஏறி கொள்ளையிட வீட்டுக்குள் இறங்கிய அந்தக் கள்வனுக்கு 15 வயது இருக்கும். கையும் மெய்யு மாக பிடிக்கப்பட்ட கள்வன் கல் முனை பொலிஸாரிடம் ஒப்படை க்கப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment