August 29, 2015

”பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்”- கீர்த்தி தென்­னக்கோன்!

தனி­நபர் சுதந்­தி­ரத்தை மிகவும் மோச­மாக பாதிக்கும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் இரத்து செய்­யப்­பட வேண்­டு­மென கபே அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார்.

எமது நாட்டில் பயங்­க­ர­வாத தடை சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசு அறி­வித்­துள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
கீர்த்தி தென்­னக்கோன் மேலும் கூறு­கையில், எமது நாட்டில் காணப்­பட்ட 30 வரு­ட­கால யுத்தம் முடி­வ­டைந்து இன்று சுமு­க­மான முறையில் ஜன­நா­யகம் காணப்­ப­டு­வ­தோடு அனைத்து மாவட்­டங்­க­ளிலும் நீதி­யான மற்றும் சுதந்­தி­ர­மா­ன­து­மான முறையில் தேர்­தல்­களும் நடை­பெற்­றுள்­ளன. அவ்­வா­றான நிலையில் தனி­நபர் சுதந்­தி­ரத்தை மிகவும் மோச­மாக பாதிக்கும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் இரத்து செய்­யப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். இதனை கடந்த காலங்­களில் நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­துள்ளோம். அந்­த­வ­கையில் இது தொடர்பில் பல்­வேறு கருத்­துக்­களை தெரி­வித்த அர­சியல் கட்­சிகள் மற்றும் சிவில் அமைப்­புக்கள் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் அரசில் எத­னையும் தெரி­விக்­காமை தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும்.
இவ்­வா­றான நிலையில் இலங்கை வர­லாற்றில் மிகவும் மோச­மான அடக்­கு­முறைச் சட்­ட­மான பயங்­க­ர­வாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுப்ப தோடு இதற்கு அனைவரும் அரசை வலியு றுத்தவும் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment