August 25, 2015

இலங்கை கடற்படை வெறிச் செயல் தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல்: மீன்பிடி சாதனங்கள் சேதம் :

கச்சத்தீவுப் பகுதியில் இலங்கை ராணுவம்; தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல்:உயிர்பயத்தால் பெரும் நஷ்டத்தோடு கரை திரும்பியமீனவர்கள குற்றசாட்டு நேற்றுக்காலை ராமேஸ்வரத்திலிருந்து 600
க்கும் மேற்பட்ட விசை படகுகளில்; மீனவர்கள மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள்  கச்சத்தீவுக்கு தலைமன்னாருக்கும் இடையே இரவு 10 மணிக்கு மீன்பிடித்துக் கொன்டிருந்த போது கேஸ் படகு மற்றும் நவீன ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்தயதோடு  100 க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர் இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் கரை நோக்கி படகுகளை திருப்பினர் அப்போது கண்ணன்,ஆரோக்கியம்,செல்வராஜ் ராமசாமி கதிரேசன உள்ளிட் 5 பேர் சென்ற படகு நடுக்கடலில் முழகியது. இதனையடுத்து 5 மீனவர்களும் சக மீனவர்களால் மீட்கப்பட்டு கரைதிரும்பினர்.
அதே போல இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியதோடு படகுகளிலிருந்த மீனவர்களை நிர்வாணப்படுத்தி உருட்டுக்கடடைகளால் தக்கியுள்ளனர் இனிமேல் இப்பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் ஒரே நாளில் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதில் சுமார் ஓரூ கோடி மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் மற்றும் மின்களை சேதப்படுத்தி கொள்யையடித்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனா மேலும் இச்சம்பவத்தால ராமநாதபுரம் மாவட்ட கடலோரக்கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேட்டி 1 எடிசன் பாதிக்கப்பட்டு கரை திரம்பிய மீனவர் ஒரே நாளில் எங்கள் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது மேலும் நிர்வணப்படுத்தி தாக்குதல் நடத்த துவங்கிவிட்டனர் சென்ற அணைத்து படகுகளுமே இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுத்தான் கரை திரம்பியுள்ளது மேலும் தற்போது அதிநவின படகுகள் மூலம் எங்களை தாக்கிவருகின்றனர் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவிப்பதோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .
பேட்டி 2,எமரிட் தலைவர் மீனவன் விசைபடகு மீனவர்சங்கம் மீனவர்களை காப்பாற்றுவோம் எனக்கூறிய தற்போதைய மத்திய அரசு இலங்கை அரசோடு இணைந்து கொலை வெறித்தாக்குதல் நடத்தி வரூகிறது தொடாச்சியான தாக்குதலால் மீன்பிடி தொழிலாளாகள் வயிற்றுப்பிழைப்புக்காக வேற்றுமாநில நோக்கி செல்லத்துவங்கிவட்டனர் ஆகவே நட்பு நாடு எனக்கூறிக் கொன்டு தமிழக மீனவர்களை அழித்தக் கொன்டுள்ள இலங்கை அரசுக்கு மத்திய மாநில அரசுகள் கண்டணம் தொவிப்பதேர்டடு பேச்சுவார்தையின்மூலம் மீனவர்களை காப்பாற்றவேண்டும் இல்லையேல் வரும் தேர்தலில் மீனவர்களுக்கு எதிரான அரசுகளை இந்த நாட்டைவிட்டே விரட்டுவோம் என எச்சரிக்கை தெரிவித்துள்னர்.

No comments:

Post a Comment