August 25, 2015

வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு!

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, மோட்டார் போக்குவரத்து அமைச்சால் 25-08-2015 செவ்வாய் காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் நூலக மண்டபத்தில் யாழ் மாவட்ட அரச ஊழியர்களுக்கான வீதி ஒழுங்குகளும் விபத்துக்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றது, இவ் விசேட கருத்தமர்வை வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்ப்பாடு செய்திருந்ததது,
நிகழ்வுக்கு வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.பத்திநாதன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு எஸ்.சத்தியசீலன் அவர்களும் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செஇயலாலர்கலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் அமைச்சர் தனது உரையில் இப்போது யாழ்மாவட்டத்தில் ஆரம்பித்துள்ள இவ் விசேட கருத்தமர்வு ஏனைய 4 மாவட்டங்களுக்கும் இடம்பெறும் என்றும், எமது மாகாணத்தில் தற்போது வாகன நெரிசல் கூடிய்ள்ளதையும் நமது ஒரு சில வீதிகள் பழுதடைந்தும் காணப்படுவதால் விபத்துக்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் அதனை தடுக்கவே இவ்வாறு விழிப்புணர்வுகளை தமது அமைச்சு மேற்கொள்வதாகவும், தற்போது பத்திரிகைகளை பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் குறைந்தது மூன்று அல்லது நாலு விபத்துக்கள் இடம்பெற்று சாவுகள் இடம்பெறுவதை காண முடிகின்றது, இவற்றுக்கு ஓர் தீர்வு வேண்டும் என்ற கோணத்திலே நாம் நமது மாகாணத்தில் விபத்துக்களை குறைக்க முழு மூச்சாக செயற்ப்படவேண்டும் இதற்க்கு அனைத்து சமூகமும் இணைந்து ஒத்துளைப்பதநூடே இதனை நிலைநாட்ட முடியும் என்றும், பொதுவாகவே விபத்துக்கள் ஏற்ப்பட ஒவ்வொரு சாரதிகளும் அசமந்தப்போக்கில் வாகனத்தை செலுத்துவதும் ஏனைய பாதசாரிகள் உரிய இடங்களில் உரிய வாறு நடந்துகொள்ளாமையும், கடவைகளை மற்றும் வீதி ஒழுங்கு விதிகளை பின்பற்றாமையுமே முக்கிய காரணமாகுமெனவும் எதிர்வரும் காலத்தில் ஒவ்வொரு சாரதிகளும் கவனமாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு விபத்துக்களையும் தவிர்த்துக்கொள்ளலாம் எனவும், இப்போது இடம்பெறும் கருத்தமர்வு அரச ஊழியர்களுக்கு இடம்பெறுவதாகவும், ஏற்க்கனவே சாரதிகளுக்கான கருத்தமர்வு இடம்பெர்ருள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ் விசேட கருத்தமர்வில் சுமார் 50 அரச ஊழியர்கள் வரை பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment