தமிழகத்தில் தொடர்ந்தும் புலி என்ற குற்றச்சாட்டில் ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து தமிழக பத்திரிகை ஒன்றிற்கு பேட்டிகொடுத்த போதே
பழ.நெடுமாறன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
கேள்வி : தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து க்யூ பிராஞ்ச் போலிசாரால் கைது செய்யப்படுவதாக தகவல்கள் வருகிறதே?
பதில் : க்யூ பிராஞ்ச் போலிஸாரை இந்த விவகாரத்தில் பொய் பிராஞ்ச் போலிஸார் என்றே அழைக்க வேண்டும். இவர்கள் ஆரம்பம் முதல் விடுதலைப் புலிகள் என்று பலரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட புலிகள் என்று க்யூ பிராஞ்ச் நிரூபித்துக் காட்டியதாக எனக்குத் தெரியவில்லை.
இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் கிருஸ்ணகுமாருக்கு வயது முப்பதுதான் இருக்கும். ஆனால் இவர் தம்பி பிரபாகரனுக்கு உதவியாளராக இருந்தார் என்று சொல்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? இவர்கள் சொல்வது போல் இருந்தால் தம்பி பிரபாகரன் சிறுவரை பாதுகாப்பாளராக வைத்துக் கொண்டாரா?
இவை எல்லாம் க்யூ பிராஞ்ச் போலிஸார் திட்டமிட்டு சிலரை திருப்திப்படுத்த போடும் நாடகம்.
கேள்வி : விடுதலைப் புலிகள் ஆரம்ப காலத்தில் இருந்ததைப் போன்று மீண்டும் காலூன்றி விட்டதாக இலங்கை முன்னால் அதிபர் ராஜபக்சே தேர்தல் பிரச்சாரத்தில் கூறிகின்றார்களே?
பதில் : ராஜபக்சே தன்னுடைய இயலாமையால் தேர்தலுக்காக மக்களிடம் அனுதாபத்தையும் வாக்குகளையும் பெறுவதற்காக அப்படி சொல்கிறார்.
கேள்வி : அப்படியென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறீர்களா?
பதில் : அப்படிச் சொல்லவில்லை… அவர்கள் பெரிய கட்டுப்பாட்டோடு உலகளவில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ராஜபக்ஷே எப்படியாவது சிங்கள மக்களின் வாக்கை வாங்கவேண்டும் என்கிற குறிக்கோளில் வாய்க்கு வந்ததை அள்ளி விடுகிறார்.
இவ்வாறு பழ.நெடுமாறன் அவர்கள் பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment