நாடாளுமன்ற தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் இம்முறை தமிழ் பிரதிநிதியொருவர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக அந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்
மூலம் தெரியவந்துள்ளது. அந்த மாவட்டத்தில் தமிழ் இளைஞர், யுவதிகள், ஆசிரியர்கள் மற்றும் தோட்ட பகுதி மக்கள் ஆகியோரிடையே மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளின் மூலம் அதிகமானவர்கள் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டத்தில் 40,000 தமிழ் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் சிறிய கட்சியொன்றினூடாக மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பான்மை கட்சியொன்றில் தமிழர் ஒருவர் போட்டியிடும் பட்சத்தில் அந்த வேட்பாளர் குறைந்தது 45,000 விருப்பு வாக்குகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் அங்கு 40,000 தமிழ் வாக்குகள் மாத்திரமே இருக்கும் நிலையில் பெரும்பான்மை கட்சியொன்றில் போட்டியிட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது சாத்தியப்படாதவொன்று.
ஆனால் சிறிய கட்சியொன்றில் போட்டியிடும் போது அந்த கட்சி 18,000 இற்கும் அதிக வாக்குகளை பெற்றாலே போதும் ஒரு ஆசனத்தை வென்று விடலாம். இதன்படி சிறுபான்மை கட்சியொன்றினூடாக இம்முறை கேகாலை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. என அந்த ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வுக்கிணங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 21,000 இற்கும் அதிகபடியான வாக்குகளை பெற்று ஆசனம் ஒன்றை வென்றெடுப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இது வரை அந்த மாவட்டத்திலிருந்து தமிழ் பிரதிநிதியொருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment