பொதுத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. தேர்தலில் நாங்கள் தேல்வியடைந்தமைக்கு தமிழரசுக் கட்சியே காரணமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செயலாளர் அவர்கள், எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்தைக் கூறவில்லை. மாறாக வாக்குப் போடக் கூடாது என்ற கருத்தே கூறியுள்ளார்.
ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்'க வேண்டும். என் மீது அதிருப்தி இருந்தால் வாக்களிக்க வேண்டாம்
என மக்களிடம் கேட்டிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என மக்களிடம் கேட்டிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தோல்வியின் பின்னணியில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் - பொன்.செல்வராசா குற்றச்சாட்டு
பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழரசுக்கட்சியின் ஐந்து பேருக்கும் ஆதரவாக வேலை செய்கின்றேன் என்று வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும் பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மிக அக்கறையாக இருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றஞ்சாட்டினார்.
நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கலந்து கொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஐந்துபேர் வெற்றிபெற்றோம். அதேபோன்று இம்முறையும் ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஐந்து பேரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தவர்களாகவுள்ளனர்.
வடக்கினை பொறுத்தவரையில் வேறுகட்சிகளில் இருந்து இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை நான்காக இருந்த மாற்றுக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் இன்று இரண்டாக குறைந்துள்ளது.
வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தளத்தினை பதித்துள்ளது என்பதை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். பேரினவாத கட்சிகளோ, வேறு தமிழ் கட்சிகளோ ஆதிக்கம் செலுத்தமுடியாது என்பதை 2015தேர்தல் கோடிட்டு காட்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் நாங்கள் எட்டுப்பேர் போட்டியிட்டாலும் கூட சென்றமுறை போன்று மூன்று பேர்தான் வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. சென்றமுறை 66 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தோம். இம்முறை 127ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான ஆதரவு இரட்டிப்படைந்துள்ளது. இந்த ஆதரவிற்கு காரணம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆற்றிய சேவையென்பதை கூறியே ஆகவேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரட்டிப்பு வெற்றியை பெற்றதற்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளதே காரணம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடக்கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட தலைமை கடுமையாக இருந்தது.
தமிழரசுக்கட்சியின் இறுதி மத்திய குழு கூட்டத்தில் நாங்கள் கட்சியை வளர்ப்பதில்; ஈடுபடவில்லையெனவும் கட்சி வளர்ப்பில் ஈடுபடாதவர்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்கதல்ல எனவும் கட்சி பொதுச்செயலாளர் கூறியிருந்தார். அதனைத்தொடர்ந்து நாங்கள் போட்டியிடக்கூடாது என்பதிலும் அவர் அக்கறையாக இருந்தார்.
இருந்தாலும் நாங்கள் வழங்கிய அழுத்தங்கள் காரணமாக வேட்பாளராக போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்டோம். இந்தவேளையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 25பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் நாங்கள் எட்டுப்போர்தான் தெரிவு செய்யப்பட்டிருந்தோம். இதில் இரண்டு பேரையே புதிதாக இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் இது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 25 பேரில் இருவரைத் தவிர மற்றைய அனைவரும் எங்களை விமர்சிப்பவர்களாகவே இருந்தார்கள். அவர்களுக்கு வேட்பாளராக அனுமதி வழங்கப்படாததற்குக் காரணம் நாங்கள் தான் என்று குறிப்பாக நானே காரணம் என்று எனக்கு எதிராக இந்த தேர்தலில் வேலை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தேர்தல் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய தேர்தலாகும். பழையவர்கள், புதியவர்கள் என்ற மோகம் இந்த தேர்தலில் மிக உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இதற்கு முக்கிய காரணமானவர் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
அவர் எந்தவகையில் தமிழரசுக் கட்சிக்காக வேலை செய்தாரோ எந்தவகையில் தமிழருக்கட்சியின் வேட்பாளர்கள் ஐந்துபேருக்கும் ஆதரவாக வேலை செய்கின்றேன் என்று வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும் மறைமுகமாக பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மிக அக்கறையாக இருந்தார் என்பதை நான் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை பல பிரச்சனைகள் வேட்புமனுத் தாக்கலில் இருந்தன. இதில் சித்தாண்டிப் பிரச்சனை முக்கிய பிரச்சனையாக இருந்தது. உண்மையில் வேட்பாளர் தெரிவில் நாம் மூவரோ அல்லது முதன்மை வேட்பாளரான நானோ ஆதிக்கம் செலுத்தவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அதற்கென்று மாவட்டக்குழு ஒன்றுள்ளது. அம் மாவட்டக் குழுவைக் கூட்டி மூன்று பழைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சி அங்கத்தவர்களும் சேர்ந்து போக அந்த இரண்டு பேருக்குரிய இடங்களை மாவட்ட தமிழரசுக்கட்சியின் கிளைதான் தெரிவு செய்தது.
இவ்வாறான நிலையில் சித்தாண்டி பிரச்சினை ஏற்பட்டதற்கு முழுக்காரணமும் எமது தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கத்தையே சாரும்.
No comments:
Post a Comment