தேசிய கூட்டமைப்புக்கும், அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.இதன் போது தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன் கடந்த தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காணி விடுவிப்பு, வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் யுத்தக்குற்ற அறிக்கை வெளியாக்கப்படும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நிஷா பீஷ்வால் இதன் போது உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment