இரவு நேர விருந்துபசார நிகழ்வொன்றிற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுமார் 7 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கிஸ்ஸையில் உள்ள விருந்துபசார விடுதியொன்றில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு, உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மதுபான வகைகளும், வெளிநாட்டு சிகரட் வகைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றிற்கான ரசீதுகள் நாமலின் அப்போதைய செயலாளர்களான சஞ்ஜய சமரசிங்க மற்றும் எரங்க ஆகியோரின் பெயரில் பெற்றுக்கொள்ளப்பட்டு மக்களின் பணத்தை அதற்கு செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், குறித்த விடுதியில் 6 சொகுசு அறைகளும் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மஹிந்தவின் புதல்வர்கள் செய்த ஆடம்பர செலவுகள் மக்களின் பணத்தை கொள்ளையடித்தே நடத்தப்பட்டதென, அண்மையில் ஐ.தே.கவின் அம்பலப்படுத்தல் நிகழ்ச்சியில் நளீன் பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின்போது, ஒருநாள் காலை சாப்பாட்டிற்காக மஹிந்த குடும்பம் 90 லட்சம் செலவிட்டதாகவும், அதற்கான கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லையெனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


No comments:
Post a Comment