August 13, 2015

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கு 78 இலட்ச பணம் சுமந்திரனிற்கு அன்பளிப்பு!

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வேட்பாளர்களிற்கு பணம் அள்ளிவீசப்படுவது அனைவரும் அறிந்ததே.அவ்வகையினில்
கூட்டமைப்பிற்கு கடந்த காலங்களினில் புலம்பெயர் உறவுகளது நிதி உதவியே அள்ளி வழங்க்கப்பட்டு வந்திருந்தது.ஆனால் இம்முறை அது பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையினில் தற்போது இந்திய மற்றும் இலங்கை அரசினது உதவிகளே கூட்டமைப்பிற்கு பெருமளவினில் பிரச்சாரங்களை முன்னெடுக்க உதவுகின்றது.பதிவு இணையச் செய்தி 

இந்நிலையினில் பிரதான கட்சியான ஜ.தே.கவின் தலைவர் ரணிலோ தனது கட்சி வேட்பாளர்களிற்கு வெறும் 25 இலட்சத்தை ஒதுக்கி வழங்கியிருந்த போதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் சுமந்திரனிற்கு இரண்டாம் கட்ட செலவீட்டிற்காக 78 இலட்சத்தை நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பதிவு இணையச் செய்தி 

ஏற்கனவே தேர்தல் செலவுகளிற்கென சுமார் ஆறு கோடியினை சுமந்திரனிற்கு ரணில் வழங்கியிருந்ததாக கூறப்படும் நிலையினில் தற்போது இறுதி நாள் செலவீனங்களிற்காக குறித்த 78 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.பதிவு இணையச் செய்தி 
கூட்டமொன்றை ஏற்பாடு செய்பவர்களிற்கு தலா இரண்டு இலட்சம்,வேலை செய்யும் மாணவர்களிற்கு மதுபானப்போத்தல்,புரியாணியென அள்ளி விசியப்பட்டுவருகின்றது.பதிவு இணையச் செய்தி 

ஏற்கனவே தனது கட்சி வேட்பாளர் விஜயகலா தெரிவு செய்யப்படுவதிலும் பார்க்க சுமந்திரன் தெரிவு செய்யப்படுவதே பிரதானமானதென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment