கிழக்கில் நிலவும் கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 65 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு 6 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மேற்பட்டோர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு 6 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக இங்குள்ள மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு படுவான்கரை, வவுணதீவு, வாகரை, வெல்லாவெளி போன்ற பிரதேசங்களுக்குட்பட்ட எல்லைப்புற கிராமங்கள் மற்றும் மீள் குடியேற்றக் கிராமங்கள் ஆகியவற்றிலுள்ள மக்கள் குடிநீர் இன்றி அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப்பிரதேசங்களிலுள்ள ஆறுகள் குளங்கள் ஆகியவற்றின் நீர்மட்டம் வற்றியுள்ளதுடன் சில நீர்நிலைகள் வரண்டு போயுள்ளன. சாதாரண நாட்களிலேயே குடி நீருக்கு பெரும் சிரமங்களை சந்திக்கின்ற கிராமப்புற மக்கள் தற்போது கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இங்குள்ள கிணறுகள் கூட வற்றிப்போயுள்ளன.
No comments:
Post a Comment