June 7, 2015

கிளிநொச்சியில் அதிகரிக்கும் மனநோயாளர்கள்

வன்­னிப்­ப­கு­தி­களில் யுத்­தத்தின் பின்னர் உள­நலம் பாதிக்­கப்­பட்­டோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாகவே வன்னிப்பகுதியில் இந்த அதிகரிப்பு காணப்பட்ட போதும், கிளிநொச்சியிலேயே இதன் தாக்கம் அதிகமென கூறப்படுகிறது.

இவ்­வாறு உள­நோய்க்­கா­ளா­னோரில் பலர் தற்­கொலை செய்து கொள்­வதை காண­மு­டி­கின்­றது. கிளி­நொச்சி, கரைச்சி பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள மலை­யா­ள­புரம் கிராம சேவை­யாளர் பிரிவில் மட்டும் கடந்த சில மாதங்­க­ளுக்குள் ஐந்து பேர்­வரை உள­நலப் பாதிப்பால் தற்­கொலை செய்து கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
கிளி­நொச்சி மாவட்ட பொது வைத்­தி­ய­சாலை மற்றும் பரந்­த­னி­லுள்ள கிளி­நொச்சி மாவட்ட ஆயுர்­வேத வைத்­தி­ய­சாலை ஆகி­ய­வற்றில் உள­வள சிகிச்­சைப்­பி­ரி­வுகள் இயங்கி வரு­கின்­றன. இங்கு சிகிச்சை பெற வரும் மன நோயாளர்களின் தொகையும் அதிகரித்துக் காணப்படுகிறது.

No comments:

Post a Comment