பொலிசாருக்கு பயந்து ' மாத்தையா நானில்லை ' , ' மாத்தையா நானில்லை ' என
கத்திய குழுவுக்கு மாத்தையா குழு என பொலிசார் பெயர் சூட்டியுள்ளதாக
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் சுன்னாகம் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மாத்தையா குழு பொலிசாரினால் கைது என ஊடகங்களில் செய்திகள் வெளி ஆகி இருந்தன.
அது தொடர்பில் அப்பிரதேசத்திற்கு நேரில் சென்று தான் விசாரித்த போது அப்படி ஒரு குழு இல்லை என பிரதேசவாசிகள் கூறினார்கள். அது தொடர்பில் பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கையில் ,
அன்றைய தினம் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இரு குழுக்களும் பரஸ்பர வாள் வெட்டில் ஈடுபட்டனர்.
அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அவர்களை கைது செய்ய முற்பட்ட போது ' மாத்தையா நானில்லை ' மாத்தையா நான் இல்லை ' என வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயத்தில் கத்தினார்கள்.
அதனை பொலிசார் அக் குழுவுக்கு மாத்தையா குழு என பெயர் சூட்டி விட்டார்கள் என அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக பிரகாஸ் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment