May 10, 2015

புதிய தேர்தல் முறையில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது.!

புதய தேர்தல் முறையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் பழைய முறைமையின் கீழே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 


இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த வாரத்தில் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் பாராளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜே.வி.பி கட்சிப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தை போன்றல்லாது, 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பெரும்பாலும் தற்போது நடைமுறையில் உள்ள விருப்பத் தெரிவு முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment