இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆறு பேரடங்கி இந்திய மீனவர்கள் குழு நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.
அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு மீனவர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோ ருடனும் இந்தக் குழு பேச்சு நடத்தும் என்று இலங்கை இந்திய மீனவர் பேரவையின் இலங்கை இணைப்பாளர் எஸ். பி. அந்தோனி முத்து தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் “எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் சுடப்படுவார்கள்” எனக் கூறிய கருத்தானது தென்னிந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே நல்லெண்ணத்தின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை தமிழ் நாட்டு மீனவர்கள் குழு சந்திக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அந்தோனிமுத்துவின் சிரேஷ்ட புதல்வர் அருட்சகோதரர் ஏ. எம். மரியஜோய் அந்தோனிமுத்து இன்று அருட் தந்தையாக திருநிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கான நிகழ்வு காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காகவே இந்திய மீனவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment