May 5, 2015

கணவனைக் கொலைசெய்ய கொழிக்கடை முதலாளியை ஒப்பந்தம் செய்த மனைவி !


அடியாள் வைத்து பொலிஸ் கணவனை போட்டு தள்ளிய மனைவி: எக்ஸ்ரே ரிப்போர்ட் ! கூலிக்கு அடியாள் வைத்து பொலிஸ் கணவனை போட்டு தள்ளிய மனைவி: எக்ஸ்ரே ரிப்போர்ட் தரும் தகவல் ! கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. காலை விடிந்து சிறிதுநேரத்திலேயே பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டு விட்டார் என்பது தான் அது. பண்­டா­ர­கமை பொலிஸ் நிலை­யத்தின் வழக்­கு­களை கையாளும் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் ஆர். டப்­ளியூ. டப்­ளியூ. பலி­ஹ­வ­தென (53 வயது) என்பவரே கழுத்­த­றுக்கப்பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.
பாணந்­துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பெக்­கே­கம எனும் ஊரில் உள்ள அவ­ரது வீட்­டி­லேயே இவ்­வாறு கழுத்­த­றுத்து கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். "சேர்... நான் சப் இன்ஸ்­பெக்டர் பலி­ஹ­வ­தெ­னவின் மனைவி பேசு­கிறேன். சேர் அவரை யாரோ கொலை செய்து விட்­டார்கள். கட்­டிலில் சட­ல­மாக இருக்­கிறார். தலை­ய­ணை­யெங்கும் இரத்­தக்­கறை உள்­ளது. பய­மாக இருக்­கி­றது சேர்..." என 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை அதி­காலை 4.30 மணிக்கு பாணந்­துறை தெற்கு பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்த அவ­சர அழைப்பில் கூறப்­பட்­டது. உடன் செயற்­பட்ட பொலிஸார் பாணந்­துறை பிரி­விற்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் சமன் ரத்நா­யக்­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக ஸ்தலத்­துக்கு சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.
ஸ்தலத்­துக்கு சென்ற பொலிஸார் அந்த வீட்டை குற்றப் பிர­தே­ச­மாக பிர­க­டனம் செய்து தட­யங்­களை தேட ஆரம்­பித்­தனர். வீட்டின் இடது பக்க அறை­யொன்றில் உப பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தென கட்­டிலில் சட­ல­மாக கிடந்தார். அந்தக் கட்­டி­லுக்கு போடப்­பட்­டி­ருந்த நுளம்பு வலை பெரி­தாக கசங்கி இருக்­க­வில்லை. கொஞ்சம் அந்த நுளம்பு வலை வில­கி­யி­ருந்­தது. சட­ல­மாக கிடந்த பலி­ஹ­வ­தெ­னவின் கழுத்தில் ஆழ­மான ஒரு வெட்டுக் காயம் மட்­டுமே காணப்­பட்­டது. தலை­யணை இரத்­தத்தால் நனைந்­தி­ருக்க இறுதி நேரத்தில் போராடி இருக்­கத்­தக்க எந்த தட­யமும் அங்கு காணப்­ப­ட­வில்லை. மேலதிக தடயங்களை அறிய, பொலிஸ் மோப்பநாயை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்­படி களுத்­துறை பொலிஸ் நிலைய மோப்ப நாயான "வூசி" ஸ்தலத்­துக்கு அழைக்­கப்­பட்­ட­து. இதன்பின்னர், சட­ல­மாக உப பொலிஸ் பரி­சோ­தகர் கிடந்த அறை­யி­லி­ருந்து தட­ய­மாக தலை­மு­டி­யொன்று பொலி­ஸா­ருக்கு கிடைத்­தது.
இந்­நி­லையில் என்ன நடந்­தது என அறிய சட­ல­மாக கிடக்கும் உப­பொலிஸ் பரி­சோ­த­கரின் மனை­வி­யான ரத்ன ரஞ்­சனியின் (49 வயது) என்ன நடந்தது என்று கேட்டார்கள். "சேர்... எனக்கு 10, 13 வய­து­களில் இரு மகன்மார் உள்­ளனர். நான் அவர்­க­ளுடன் முன் அறையில் நித்­தி­ரைக்கு சென்றேன். வழமை போலவே அவர் தனி­யான அறையில் நித்­தி­ரைக்கு சென்றார். அதி­காலை முதலில் நான் எழும்பி அவரை எழுப்­பு­வது வழக்கம். அதன்­படி இன்றும் (6 ஆம் திகதி) அதி­காலை 4.30 மணிக்கு எழுந்து அவ­ரது அறைக்கு சென்றேன். அப்­பொ­ழுது தான் அவர் இரத்த வெள்­ளத்தில் கிடப்­பதைக் கண்டு பொலி­ஸாருக்கு அறி­வித்தேன்" என்று ரத்ன ரஞ்­சனி கூறி முடித்தார். அதனை தொடர்ந்து பொலிஸார் தட­ய­வியல் நிபு­ணர்­களின் உத­வி­யுடன் வீட்டை சல்­ல­டை­யிட்டனர். கொலைகாரர்கள் வீட்­டுக்குள் புகுந்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கத்­தக்க வாயில் ,ஒன்­றினை வீட்டின் மேல் தளத்தில் பொலி­ஸார் கண்டுபிடித்தனர். அத்­துடன் வீட்டின் கீழ் தளத்­தி­லி­ருந்த குளி­ய­லறை பக்­க­மாக மேல் மாடிக்கு ஒரு­வரால் ஏறி வரக்­கூ­டிய வச­திகள் இருப்­ப­தையும் பொலிஸார் அவ­தா­னித்­தனர்.
இந் நிலையில் இக் கொலைக்கு இரு சந்­தேக நபர்கள் வந்­தி­ருக்க வேண்டும் எனவும் மிகத்­திட்­ட­மிட்ட வகையில் அது செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டு­மென்­ப­தையும் பொலிஸார் அனு­மா­னித்­துக்­கொண்­டனர். பலி­ஹ­வ­தென ஏன் கொல்­லப்­பட்டார் ? யாரால் கொல்­லப்­பட்டார்? அதன் பின்­னணி என்ன? என்­ப­தற்கு விடை காண வேண்­டிய தேவை இருந்­தது. இதற்­கி­டையே ஸ்தலத்­துக்கு அழைத்து வரப்­பட்ட களுத்­துறை பொலிஸ் நிலைய மோப்ப நாய் வூசி மோப்பம் பிடித்து வீட்­டி­லி­ருந்து 100 மீற்­றர்­க­ளுக்கு உட்­பட்ட பற்றைக் காடு நிறைந்த இடத்தை நோக்கி சென்­றது. அந்த சிறு காட்­டுப்­ப­கு­தியை சோதனை செய்த பொலிஸார் அதி­லி­ருந்து 18அங்­குல நீளம் கொண்ட மன்னா கத்­தி­யொன்­றினை கண்டு பிடித்­தனர். குறித்த கத்­தியே உப பொலிஸ் பரி­சோ­த­கரை கொலை செய்ய பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கித்­தனர்.
இந் நிலையில் அந்தக் கத்­தியை "வூசி" மோப்ப நாய்க்கு மோப்பம் பிடிக்கச் செய்த பொலிஸார் விசா­ர­ணை­களில் முன்­னேற்­றத்தை எதிர்­பார்த்து முன்­னே­றினர். எனினும் மோப்ப நாயோ எதிர்­பா­ராத வித­மாக கொலை இடம்­பெற்ற வீட்­டி­னுள்­ளேயே சென்­ற­துடன் கொலை­யாளி நுழைந்­த­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட மேல் மாடிக்கு படி­களில் ஏறி­யது. மோப்ப நாயின் இந் நகர்வு பொலி­ஸாரை சிந்­திக்க வைத்­தது. இந்­நி­லையில் பொலிஸார் தட­ய­மாக சந்­தே­கித்து மீட்­டி­ருந்த திறப்­பொன்­றி­னையும் "வூசி" ஊடாக மோப்பம் பிடிக்கச் செய்­தனர். அந்த சந்­தர்ப்­பத்­திலும் "வூசி" நேராக கொலை­யுண்ட உப பொலிஸ் பரி­சோ­த­கரின் வீட்டின் மேல் மாடிக்கே சென்­றது. இது பொலி­ஸாரின் சந்­தே­கத்தை மேலும் அதி­க­ரித்­தது. இத­னி­டை­யேதான் ஸ்தலத்துக்கு வந்த பாணந்­துறை நீதிவான் ருச்­சிர வெலி­வத்த விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்டார்.
மோப்ப நாய் வூசியின் செய்­கை­களால் உப பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தெ­னவின் கொலை­யுடன் ஏதோ ஒரு வகையில் அவ­ரது வீட்டில் இருந்த ஒரு­வ­ருக்கு தொடர்பு இருக்க வேண்டும் என சிறப்பு பொலிஸ் குழு சந்­தே­கித்­தது. அது குறித்து ஆராய்ந்த போது கொலை இடம்­பெற்ற இரவு வேளையில் இவ்­வீட்டில் உப­பொலிஸ் பரி­சோ­த­கரும் அவர் மனைவி ரத்ன ரஞ்­சனியும் இரு பிள்­ளை­க­ளுமே இருந்­துள்­ளமை தெரிய வந்­தது. இந் நிலையில் தான் சிறப்புப் பொலிஸ் குழுவின் சந்­தேகம் மனைவி ரத்ன ரஞ்­சனி மீது விழுந்­தது. எனினும் சிறப்புப் பொலிஸ் குழு அதனைக் காட்டிக் கொள்­ள­வில்லை. ஏப்ரல் 8ஆம் திகதி புதன்­கி­ழமை உப பொலிஸ் பரி­சோ­த­கரின் இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்று முடியும் வரையில் விசா­ர­ணை­களில் எவ்­வித முன்­னேற்­றமும் இல்­லா­ததைப் போன்றே பாவனை செய்து கொண்டு சிறப்புப் பொலிஸ் குழு தனது நட­வ­டிக்­கை­களை தொடர்ந்­தது. இதேவேளை பொலிசார் திடீரென மனைவியைக் கைதுசெய்தார்கள்.
கடும் விசாரணை நடத்த ஆரம்பித்தவேளை மர்ம முடிச்சுகள் மெல்மெல்ல அவிழ்ந்­தன. “சேர்.... எனது கணவர் எனக்கும் பிள்­ளை­க­ளுக்கும் சொல்­லொணா சித்­தி­ர­வ­தை­களை செய்தார். ஒழுங்­காக உண்டு மகி­ழவோ உடுக்­கவோ அவர் விட­வில்லை. அவ­ரது இன்­னல்­களை பொறுக்க முடி­யா­ம­லேயே நான் அவ்­வாறு அவரை தீர்த்­துக்­கட்­டினேன்..”என ரஞ்­சனி கூறி முடிப்­ப­தற்குள் பொலிஸார் அடுத்­த­டுத்து கேள்­வி­களை தொடுத்து கொலை தொடர்பில் அனைத்து விப­ரங்­க­ளையும் சேக­ரித்­தனர். “நானும் பிள்­ளை­களும் ஒவ்­வொரு நாளும் கஷ்­டப்­பட்டோம். அவர் எனது சொத்­துக்கள் அனைத்­தையும் அவ­ரது பெய­ருக்கு மாற்­றிக்­கொண்டார். எல்லா விதத்­திலும் நாம் கஷ்­டங்­களை அனு­ப­வித்தோம்.குறைந்­த­பட்சம் உண்ணவோ உடுக்கவோ எமக்கு சுதந்­திரம் இருக்­க­வில்லை. நான் காலையில் இருந்து இரவு வரை கடையில் கஷ்­டப்­பட்டேன். (கொலை செய்­யப்­பட்ட உப­பொலிஸ் பரி­சோ­தகர் பாண­ந்துறை நகரில் சில்­ல­றைக்­க­டை­யொன்­றுக்கு உரி­மை­யாளர்.
காலை முதல் மாலை வரை ரஞ்­ச­னியே அதனை நிர்­வ­கித்­துள்ளார். அதன் பின்னர் இரவு 10.00 மணி­வரை வேலை விட்டு வரும் உப­பொலிஸ் பரி­சோ­தகர் நிர்­வ­கித்­துள்ளார்.) முட்­டை­களை கூட எண்ணி பதுக்­கினார். அரிசி மூடை­களை அடை­யாளமிட்டே வைத்தார். இந்த அட்­டூ­ழி­யங்­களை பொறுத்துக் கொள்ள முடி­யாமலேயே அவரை கொலை செய்ய தீர்­மா­னித்தேன். அது தொடர்பில் வீட்டின் அருகே உள்ள கோழிக்­கடை முத­லாளி பலந்­த­விடம் ஒப்­பந்தம் செய்தேன். 10000 ரூபாவை செலுத்­தினேன். வேலை முடிந்­ததும் 50000 ரூபா தரு­வ­தாக கூறினேன்" என ரத்ன ரஞ்­சனி விட­யங்­களை வெளிப்­ப­டுத்த சிறப்பு பொலிஸ் குழு கோழிக்­கடை முத­லாளி பலந்­தவை கைது செய்­தது.
10000 ரூபாவை கொடுத்து ரஞ்­சனி கோழிக்­கடை முத­லாளி பலந்­த­விடம் தனது கண­வரை கொலை செய்ய ஒப்­பந்தம் கொடுத்த பின்னர், பலந்­தவே இந்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த சிலா­வத்­து­றையைச் சேர்ந்த தனது பங்­கா­ளி­யான இந்­திக பஸ்­நா­யக்­கவை சேர்த்­துக்­கொண்­டுள்ளான். அத்­துடன் உப­பொலிஸ் பரி­சோ­த­கரை கொலை செய்ய ரஞ்­ச­னியின் மாமி­யா­ரான 78 வய­து­டைய டீ.எம். சந்­­ரா­வ­தியும் பங்­க­ளிப்பு செய்­துள்­ளதை கண்­ட­றிந்த பொலிஸார் அவ­ரையும் கைது செய்­தனர். இந்­நி­லையில் தான் கடந்த 5ஆம் திகதி ஞாயி­றன்று கடையை மூடி விட்டு வீட்­டுக்கு வந்த உப­பொலிஸ் பரி­சோ­தகர் உடல் அலம்பி விட்டு இரவு உணவை உட்­கொண்­டுள்ளார்.
இந்த உணவில் தூக்க மாத்­தி­ரை­களை ரஞ்­சனி கலந்­தி­ருந்­ததால் அவர் சாப்­பிட்டு சிறிது நேரத்­தி­லேயே ஆழ்ந்த நித்­தி­ரைக்கு சென்­றுள்ளார். இந்­நி­லையில் அன்று இரவு கத்­தி­யுடன் உள் நுழைந்த இந்­திக்­கவும் பலந்­தவும் எவ்­வித சிர­மமும் இன்றி ஆழ்ந்த உறக்­கத்தில் இருந்த உப­பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தெ­னவை கழுத்­த­றுத்து கொலை செய்து விட்டு கத்­தியை அருகில் உள்ள புதர் காட்­டுக்குள் வீசி விட்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர். பொலிஸார் அந்த கத்­தியை ஏற்­க­னவே மீட்ட நிலையில் இந்­திக்க பஸ்­நா­யக்­கவை மன்­னாரில் வைத்து சிறப்பு பொலிஸ் குழு கைது செய்தது. இந்நிலையில் கைதான நால்வரையும் கடந்த 23 ஆம் திகதி பாணந்துறை நீதிவான் ருச்சிர வெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார் இந்திக்கவிற்கு எதிராக 48 மணி நேர தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர்.

No comments:

Post a Comment