May 8, 2015

ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார் யாழ். சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர்!

இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரியதுடன் ஊடகவியலாளர்களின் பொறுமையையும் பாராட்டியுள்ளார்.

காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் இன்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு சென்ற ஊடகவியலாளர்களை காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலய எல்லையில் இராணுவத்தினர் அரைமணி நேரத்திக்கு மேல் தடுத்து வைத்திருந்தனர்.
ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்க கோரி சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுடன் தொடர்பு கொண்ட பின்னரே ஊடகவியலாளர்கள் உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமான போதே சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் மன்னிப்பு கோரினார்.
அத்துடன் இது தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தெரிவித்ததாகவும், அவரும் இது ஒரு தவறான நடவடிக்கை என்பதனை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


அதேவேளை அரை மணி நேரமாக அந்த இடத்தில் பொறுமையாக நின்றமைக்காக ஊடகவியலாளர்களை பாராட்டுவதாக அவர் கூறியுள்ளார்.jaffna

No comments:

Post a Comment