May 11, 2015

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

மத்திய வங்கியில் இடம்பெற்று மோசடியை மையமாக வைத்து, பிரதமர் ரணில்விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைக்க எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன.மகிந்தவுக்கு ஆதரவான தரப்பு இதற்கான
நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மத்திய வங்கின் ஆளுனர் அர்ஜுனமகேந்திரனினால் முறிகள் விநியோகத்தில் பாரிய நிதி மோசடி செய்யப்பட்டதாக முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், பின்னர் அது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 
எனினும் இதனை மையமாக வைத்து அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சிகள் நடவடிக்கை எடுத்திருந்தன.
 
இதே காரணத்துக்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment