ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காலை 11 மணிக்கு தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பை வழங்குகிறார். ஐகோர்ட்டின் 14-ம் எண் அறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இதையொட்டி, கர்நாடக ஐகோர்ட்டிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் ஐகோர்ட்டை சுற்றி 1 கிலோ மீட்டருக்கு இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டுக்கு மொத்தம் 5 நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் 4 வாயில்கள் மூடப்பட்டு உள்ளன. ஒரு நுழைவு வாயில் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் கர்நாடக ஐகோர்ட்டு, போலீசாரின் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. கோர்ட்டு வளாகத்தில் மோப்ப நாய்களின் உதவியுடன் போலீசார் நேற்று சோதனை செய்தனர்.
கோர்ட்டுக்குள் சென்று வருகிறவர்களை கட்டுப்படுத்தும் வகையில் கோர்ட்டின் பிரதான வாசலில் போலீசார் தற்காலிக இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்து உள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment