May 14, 2015

வலி.வடக்கு மக்களிற்கு தொடர்ந்தும் பவுஸர் குடிநீர்!

கழிவு எண்ணெய் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளிலுள்ள பொதுமக்கள் நலன்கள் தொடர்பான விடயங்கள் மௌனித்துவருகின்ற நிலையில் வலி.வடக்கில் மட்டும் குடிநீர் வழங்குவதற்கு மாதாந்தம் சுமார் 1 மில்லியன் ரூபாய் செலவு செய்து வருவதாக பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு இருப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. பிரதேச செயலகம், யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியனவும் இணைந்து சுமார் 250 குடிநீர் தாங்கிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
தொண்டைமானாறிலுள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் இருந்து நாளாந்தம் கட்டணம் செலுத்தி 2 பவுஸர்களின் குடிநீர் கொள்முதல் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment