May 14, 2015

கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

கடந்த 2013ஆம் ஆண்டு தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டபோதும் அது கட்சி அரசியலுக்காக வழங்கப்பட்டதாகவும் அதனால் கட்சி அரசியலுக்கு உடன்படாதவர்கள் நியமனத்தின்போது நிராகரிக்கப் பட்டதாகவும் கிளிநொச்சி மாவட்ட தொண்ட ஆசிரியர்கள்
குற்றம் சுமத்தியுள்ளனர்.
பத்து வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர் இன்று வட மாகாண சபையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தமக்கான நியமனங்களை வழங்க வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரினர்.
ஊதியமற்ற நிலையில் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக தொண்டர் ஆசிரியர்களாக தாம் பணியாற்றுவதாகவும் தமது பொருளாதார நிலமை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடும் தொண்டர் ஆசிரியர்கள் தங்கள் நிலமையை கருத்தில் எடுத்து தகுதியின் அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பத்து ஆண்டுகளாக படாத துன்பங்களை பட்டபோதும் தொடர்ந்தும் நம்பிக்கையோடு பணியாற்றியதாக கண்ணீர் மல்க தெரிவித்த தொண்டர் ஆசிரியர்கள் புதிய அரசில் தமக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் எனக் கூறினர்.


தமக்கான நியமனங்களை விரைவில் வழங்கி தமது நெருக்கடி வாழ்வுக்கு முடிவுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் நியமனம் பெறாத தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என வடக்கு மாகாண சபையில் இன்று உறுதிமொழி வழங்கப்பட்டது.Kele -teachers

No comments:

Post a Comment